உணவு / சமையல்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவுக்கு இப்படியொரு புராதனப் பின்னணியா ?

கவிதா பாலாஜிகணேஷ்

மிழகத்தின் சிறப்பான இனிப்புப் பதார்த்தங்களில் பால்கோவாவுக்கு முக்கிய இடமுண்டு. பால்பேடா, பால் ஹல்வா போன்ற வடநாட்டு ஐட்டங்களும், திரட்டுப்பால், சீம்பால் போன்றவையும் பால்கோவோவைப் போல இருந்தாலும் பால்கோவாவுக்கு இணையாகாது.

திலும் குறிப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் சுவைக்கும் மணத்துக்கும் ஈடு இணையில்லை என்று அடித்துச் சொல்லலாம். அப்படிப்பட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவுக்கு தொன்மையான புராணம் உள்ளது என்று உள்ளூர்க்காரர்கள் கூறுகின்றனர்.

பாண்டிய மன்னன் வல்லபதேவன் தனது மருமகன் பெருமாளுக்கு 192 அடி உயரத்தில் கட்டிய கோபுரம்தான் ஸ்ரீவிலிலிபுத்தூரில் உள்ளது. இந்தக் கோபுரம்தான் தமிழ்நாட்டின் அரசு இலச்சினை ஆகும். ஆனால், பால்கோவாதான் அந்த ஊரை உலகளவில் பெருமைப்படுத்தியது.

ள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தனித்துவ சுவையில் தயாரிக்கப்படும் உணவுகள் புகழ் பெறுவதுண்டு. அதே போல கோயில் பிரசாதங்கள் மட்டுமன்றி, கோயில் அமைந்திருக்கும் ஊரில் கிடைக்கும் உணவுகளும் புகழ் பெற்றுவிடுகின்றன. இந்த வகையில் உலகப் புகழ் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா.

பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் ஏன் உலக அளவில் பிரபலம் தெரியுமா? இன்றும் இங்குள்ள ஆண்டாள் கோயிலில் நடைபெறும் வழிபாட்டுச் சடங்கின் மூலமாகக்கூட பால்கோவாவின் வரலாற்றை அறியலாம் ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள்.

பால்கோவா தயாரிக்கும் முறையும் இதைப் போன்றதே என்பதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம்.

னினும் உலக அளவில் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பிரபலம் ஆனது 20ம் நூற்றாண்டில்தான்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் பண்ணைகள் அதிகம். பால் சொசைட்டிகளில் பால் வரும் நேரத்தை கணக்கில் கொண்டு காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மீண்டும் மாலை 5 முதல் இரவு 11 மணி வரையும் பால்கோவாக்கள் சுடச்சுட தயாராகின்றன. அதி சுத்தமான பாலில் என்பது ருசிக்கு ஆதாரம்.

ஸ்ரீ வில்லிப்புத்தூர் பால்கோவா செய்முறை:

முதலில் அடுப்பில் அடிகனமான அகலமான பாத்திரத்தை வைத்து அதில் திக்கான கொழுப்பு நிறைத்த பாலை ஊற்றவும்.

கிட்டத்தட்ட 20 நிமிடம் பாலை சுண்ட காய்ச்சவும்.

பால் பொங்கி வரும்போது ஏடு மேலே தங்கிவிடும். அதை கரண்டியால் பாலுடன் சேர்த்துவிட்டு விடாமல் கிளறவும்.

பால் சுண்டி பாதியளவுக்கு வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து விடாமல் கிளறவும்.

பாலை கரண்டியால் விடாமல் கிளறினால் தான் பால்கோவா சரியான பதத்தில் வரும்.

1 லிட்டர் பால் முழுவதுமாக சுண்டி கெட்டி பதத்துக்கு வந்தபின்பு அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

தன் மேல் 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறவும்.

ப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.

டுத்து, மீதம் இருக்கும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி மீண்டும் கிளறவும்.

ப்போது நிறம் மாறி, பால்கோவா சரியான பதத்துக்கு வந்து இருக்கும். இந்த நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார்.

சொசைட்டிகளில் தயாரிக்கப்படும் பால்கோவாவை மண் அடுப்பில் முந்திரிக் கொட்டை ஓடுகளை பயன் படுத்துவதால் நெருப்பு சரியான பதத்தில் நின்று எரிந்து, பால்கோவாவுக்கு தனிச்சுவையை தருகிறது என்கின்றனர்.

நீண்ட தொலைவு பயணத்தினால் ஏற்படும் கால் வீக்கத்துக்கான தீர்வு!

கவிஞர் கண்ணதாசனின் பாடலில் ஒரு குறை! எந்த பாடல்? என்ன நடந்தது?

உங்கள் மனநிலையில் திடீர் மாற்றம் ஏற்படுகிறதா? சோகமும் கோபமும் வாட்டுகிறதா? புறக்கணிக்காதீர்கள்!

அச்சச்சோ! மழைக்காலத்தில் சாதாரண ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துறீங்களா? போச்சு! 

கோபத்தை தணிக்க உதவும் வாழ்வியல் மந்திரங்கள்!

SCROLL FOR NEXT