Restaurant-style mushroom gravy. 
உணவு / சமையல்

ரெஸ்டாரண்ட் சுவையில் காளான் கிரேவி செய்யலாம் வாங்க! 

கிரி கணபதி

சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரி சைட் டிஷ் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்படியானால் ஒரு முறை சற்று வித்தியாசமாக ரெஸ்டாரண்ட் சுவையில் காளான் கிரேவி முயற்சி செஞ்சு பாருங்க. இதை பூரி, சப்பாத்தி போன்றவற்றுடன் வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருப்பதால், நிச்சயம் ஒரு முறையாவது இதை நீங்கள் முயற்சித்துப் பார்க்க வேண்டும். 

தேவையான பொருட்கள்

காளான் - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

மல்லித்தூள் - ½ ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 

கரம் மசாலா - 1 ஸ்பூன் 

கசூரி மேத்தி - ½ ஸ்பூன் 

முந்திரி - 5

தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

காளான் கிரேவி செய்முறை: 

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கிராம்பு, சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். 

பின்னர் அதில் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக தக்காளியை நன்கு அரைத்து இதில் சேர்த்து வதக்க வேண்டும். 

மசாலா வாசனை வெளியேறும்போது காளானை சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடுங்கள். பிறகு முந்திரிப் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளறி கெட்டியாகும் வரை நன்கு வேகவிட்டு, இறுதியில் கசூரி மேத்தி கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால், அட்டகாசமான சுவையில் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காளான் கிரேவி வீட்டிலேயே தயார். 

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

SCROLL FOR NEXT