உணவு என்பது நம் வாழ்வில் ஓர் தவிர்க்க முடியாத அங்கம். அதுவும் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட வெளியில் ஹோட்டல் உணவுகளை ருசிப்பதற்கே உலகம் முழுக்க பல ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், நல்ல தரத்தோடு ருசியான உணவளிக்கும் ஹோட்டல்களை நம் மக்கள் கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள். அப்படி உலகம் முழுக்க மக்களிடம் வரவேற்பு பெற்ற மற்றும் ஒரே நாளில் அதிக அளவிலான உணவுகளை தயாரிக்கும் உணவகங்களை பற்றி தெரிந்து இங்கு கொள்வோம்.
ஹைதராபாத்தில் உள்ள பவார்ச்சி உணவகம் கமகமக்கும் பிரியாணிக்கு புகழ்பெற்றது. அதனால்தான் என்னவோ ஹைதராபாத் என்றாலே, நம் நினைவிற்கு இந்த உணவு வருகிறது. அதற்கேற்றார் போல் இந்த உணவகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான தட்டுகளில் பிரியாணி வழங்கப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், சராசரியாக 3,000 முதல் 4,000 கிலோகிராம் பிரியாணி தயார் செய்கின்றனர்.
சீஸ்கேக் தொழிற்சாலை, அதன் எண்ணிலடங்காத மெனு மற்றும் அதிக அளவு உணவு உற்பத்திக்கு புகழ் பெற்றதாகும். இவர்களின் ஒவ்வொரு கிளையிலும் தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் கையாள படுகிறார்கள். அதுவும் சில பரபரப்பான இடங்களில் ஒரு நாளைக்கு 1,000 உணவுகள் மேல் விற்கப்படுகின்றன. இதன் தாக்கம் இவர்கள் ஈட்டும் வருடாந்திர வருவாயில் பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட $2 பில்லியனை(200 கோடியை) தாண்டி போகுமாம்.
Din Tai Fung, அதன் xiaolongbao (சூப் டம்ப்ளிங்ஸ் (Soup dumplings)) க்கு பிரபலமானது, இவர்களால் உலகம் முழுவதும் பல கிளைகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிளையிலும் அதிக அளவிலான உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தைபேயில் (Taipei) உள்ள தலைமை கிளையில், ஒரு நாளைக்கு 3,000 dumplings வழங்கபடுகிறது. Din Tai Fung இன் இந்த செயல்பாடுகள் அதன் உலகளாவிய விரிவாக்கம் மூலமே அனைவருக்கும் பறைசாற்றுகிறது.
ஜம்போ கிங்டம், ஹாங்காங்கில் உள்ள மிதக்கும் உணவகம். உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான உணவகங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு ஒரே நேரத்தில் 2,300 உணவு அருந்துபவர்களுக்கு இடமளித்து, பலவிதமான கான்டோனீஸ் உணவு(Cantonese cuisine) வகைகளை வழங்குகிறார்கள். அதுவும் பிஸியான நாட்களில், 10,000 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்கிறார்கள். இவர்கள் வளர்த்த இந்த சாம்ராஜ்யத்தை வெறும் வருவாயை ஈட்டுவதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல், அவர்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா அடையாளத்தை உலகம் முழுக்க பறைசாற்றுவதிலும் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்.
டெல்லியில் உள்ள கரீம்ஸ், முகலாய உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற உயர்தர உணவகமாகும். வரலாற்று சிறப்புமிக்க ஜம்மா மஸ்ஜித்(Jamma Masjid) அருகே அமைந்துள்ள கரீம்ஸ் தினசரி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கையாளுகிறார்கள். குறிப்பாக பீக் ஹவர்சில் தினமும் சுமார் 2,000 முதல் 3,000 கிலோ வரை உணவு தயாரிக்கப்படுகிறது. அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இந்த மனநிறைவான உணவு அனுபவமே, கரீம்ஸை ஒரு புகழ்பெற்ற உணவகமாக வைத்திருக்கிறது.
இந்த உணவகங்கள், தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை சரியாக கையாளுவதால் தான் அவர்களால் ஒரு பெரிய அளவிலான உணவு உற்பத்தியை நிர்வகிக்கும் திறனை பலருக்கு எடுத்துக்காட்டாக காட்ட முடிகிறது. இந்த செயல்பாடுகளுடன் அவர்கள் பின்பற்றும் கலாச்சார முக்கியத்துவம், பிராண்ட் நற்பெயர் கடைபிடித்தல் மற்றும் வாடிக்கையாளர்களிடம் காட்டும் விசுவாசத்தின் அடிப்படையிலே, இந்த உணவகங்கள் மக்களுக்கு உணவளிக்கும் கலையில் தேர்ச்சி பெற்று வெற்றிகரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.