Temple 
ஆன்மிகம்

உலகிலேயே முதன்முதலில் கல்லில் 0 (Zero) செதுக்கப்பட்ட கோவில் எது தெரியுமா?

பாரதி

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே க்வாலியரில் உள்ள ஒரு கோவிலில் கல்லில் 0 (ஜீரோ) வடிவத்தை செதுக்கியுள்ளனர். இதன்மூலம் உலகிலேயே இந்தக் கோவிலில்தான் முதன்முதலில் 0 செதுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

உலகில் முதன்முதலில் 0 வை யார் கண்டுபிடித்தது என்ற கேள்விக்கான பதிலை தேடினோமானால், மூளை வெடித்துவிடும். ஏனெனில், இந்தக் கேள்விக்கு பலர் பல பதிலை தருகின்றனர். இதற்கு பல கதைகளும் உள்ளன.

அதில் ஒன்று, இந்தியாதான் முதன்முதலில் 0 விஷயத்தை உலகிற்கு சொன்னது என்பது. இதற்குப் பலரும் பல ஆதாரங்களை முன்வைக்கின்றனர். ஏனெனில், 0 என்பது ஒரு வெற்றிடம் , ஏதும் இல்லாத தன்மை என்ற அர்த்தத்துடன் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதே அர்த்தத்தோடு மாயன் நாகரிகம் என்று சொல்லப்படும் பண்டைக்கால இடை அமெரிக்கர்களும் இந்தியர்கள் பயன்படுத்துவதற்கு முன்பே பயன்படுத்தினார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Inscription

அந்தவகையில் 875AD யில் கட்டப்பட்ட இந்த கோவிலின் கல்வெட்டுகளில் அங்குள்ள பூங்காவின் வரைபடம் ஒன்று இருந்தது. அதில் 270 Hastas (ஆதாவது 1 ஹஸ்தா என்பது 1.5 அடி கொண்டது) மற்றும் 50 மாலைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அப்போது அந்த எண்களின் வரிசையில் கடைசி இரண்டு எண்களில் 0 வைக் குறிப்பிட்டிருந்தனர். அதாவது நாம் இப்போது பயன்படுத்தும் 0. மிகவும் சிறிய கோவிலாக இருக்கும் இந்த கோவிலின் பெயர் சதுர்புஜ் கோவிலாகும்.

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர்புஜ் கோயில், இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சாவில் அமைந்துள்ளது. சதுர்புஜ் என்ற பெயர் ‘சதுர்’ அதாவது “நான்கு” மற்றும் ‘புஜ்’ என்றால் “ஆயுதங்கள்” என்று பொருள். இது “நான்கு கைகள் கொண்டவர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மற்றும் ராமர் விஷ்ணுவின் அவதாரத்தைக் குறிக்கிறது. இந்தக் கோயில், கோட்டை மற்றும் அரண்மனை கட்டடக்கலை அம்சங்களின் கலவை மற்றும் பல அடுக்குகளின் காட்சியைக் கொண்டுள்ளது.

0 கண்டுபிடிப்பின் பல ஆதாரங்களில் இதுவும் ஒன்று. இதன்மூலம் மாயன் நாகரிக மக்களுக்கு முன்பு நாம்தான் 0 பயன்படுத்தியிருக்கிறோம் என்பது தெரியவந்துள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால், கண்டுபிடிப்புகள் அன்றாடம் நிகழ்கிறது என்பதால், இந்த முடிவு எப்போது வேண்டுமென்றாலும் மாறலாம்.

Heart Attack Vs. Cardiac Arrest: இரண்டிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

SCROLL FOR NEXT