தீபம்

நினைத்தது நடக்க வேண்டுமா? இப்படிக் கோலம் போடுங்கள்!

எம்.ஏ.நிவேதா

பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியவர்கள். அவர்கள் மனக் கசப்போடும், கஷ்டத்தோடும், மன அழுத்தத்தோடும் இருக்கக் கூடாது. அவர்களின் மனது எப்போதும் சந்தோஷமாக இருந்தால்தான் அந்த வீட்டில் சுபிட்சம் நிறைவாக இருக்கும். அம்மா, மனைவி, அக்கா, தங்கை, பெண் குழந்தைகள் என்று அனைத்து விதமான பரிமாணத்தில் இருக்கும் பெண்களுக்கும் இந்த விஷயம் பொருந்தும். எந்தப் பெண்ணையும் அனாவசியமாக கண்கலங்க வைக்காதீர்கள். அதுவே ஒருவரின் குடும்பத்துக்குப் பெரிய பாவமாக வந்து சேர்ந்துவிடும். அதேபோல், ஒரு பெண், இன்னொரு பெண்ணின் மனது நோகும்படியும் பேசக் கூடாது.

பெண்கள் தினமும் தங்களது வீட்டு வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். அதேபோல், பூஜையறை மற்றும் சமையல் அறையிலும் கோலம் போட வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும், அரிசி மாவில்தான் அந்தக் கோலத்தைப் போட வேண்டும் அதில் கூறப்பட்டுள்ளது. காரணம், மனது சார்ந்த எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு தரக்கூடிய கிரகம் சந்திரன். சந்திரனுக்கு உரியது நீர் மற்றும் பச்சரிசி. ஆகவேதான் பெண்களை தினமும் காலையில் வாசலில் தண்ணீர் தெளித்து பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். காலையில் எழுந்ததும் இந்த வேலையை பெண்கள் செய்யும்போது அவர்களுடைய மனது தெளிவு பெறுகிறது.

பெண்கள் தினமும் காலையில் எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும்போது உங்களது குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கோலம் போட்டு பாருங்கள். உங்கள் குடும்பத்துக்குப் பெரிய அளவில் எந்தக் கஷ்டமும் வராது. அதேபோல், பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து, பச்சரிசி மாவினால் கோலம் போடும்போது, உங்களுக்கு எது தேவையோ அந்த வேண்டுதலை தெய்வத்திடம் வைத்துப் பாருங்கள். அந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். இதேபோலத்தான் சமையலறையில் கோலம் போடும்போதும் உங்களுடைய மனதில், உங்களது குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு கோலம் போட்டால் அந்தப் பிரார்த்தனை கண்டிப்பாகப் பலிக்கும். இந்த வேண்டுதல்கள் எல்லாம் பலிக்க வேண்டும் என்றால், நீங்கள் பச்சரிசி மாவை அரைத்துத்தான் கோலம் போட வேண்டும். அதற்கு மாறாக, கோலப்பொடியை கலந்தோ, கோலப்பொடியிலோ அல்லது சாக்பீஸிலோ கோலம் போட்டால் உங்கள் வேண்டுதல் பலிக்காது.

தேபோல், பெண்களுக்கு நவக்கிரகங்களால் பிரச்னை, ஜாதகத்தில் கட்டம் சரியில்லை, தோஷம் இருக்கிறது, அதன் காரணமாக திருமணமாகவில்லை, நல்ல வேலை கிடைக்கவில்லை, படிப்பு சரியாக வரவில்லை போன்ற பிரச்னைகள் எல்லாம் அவர்களது ஜாதகத்தை சார்ந்தே அமைந்திருக்கிறது. மேற்சொன்ன பிரச்னைகள் தீர, தினமும் பூஜை அறையில் நவக்கிரகங்களுக்கான கோலத்தை தினமும் போட்டு வர வேண்டும். வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஏழு கோலங்கள் உள்ளன. தினமும் பூஜையறையில் கோலம் போடும்போது தங்களது பிரச்னை சுவாமிடம் சொல்லி வேண்டிக்கொண்டால் கிரகக் கோளாறிளால் உண்டான பிரச்னைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகும் என்பது குறிப்பிடத்தக்கது. ராகு, கேது ஆகியவை நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்குத் தனியாகக் கோலங்கள் கிடையாது.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT