சிவனை வணங்கி
சிந்தையில் தெளிவு
ஐம்புலன் அடக்கி
ஐயத்தை அகற்றல்.
சிவனின் அருளால்
சிவஞானம் பெறல்.
துஞ்சலிலாப்
பொழுதினில்
நெஞ்சினில் வைத்தல்.
உமையம்மை பாலூட்ட
உயர்ந்த சம்பந்தர்.
தோடுடைய செவியன்
தொடக்கப் பண்முழக்கம்
சிவனருளால் சூலைநோய்
திருநீறால்
குணமடைதல்.
கூற்றா யினவாறு
விலக்ககிலீர் பாடியவர்
உற்றநோய் அகன்றிட உழவாரப் பணியாற்றல்.
சிவனைத் தோழனாக்கி
சிந்தையில் இருத்தி
பித்தா பிறைசூடாவெனப்
பாடிய சுந்தரர்
திருத்தொண்டத் தொகை
அருளிய தொண்டர்.
திருவெம்பாவை அருளி
திருவாசகம் உரைத்தவர்
மாணிக்கவாசகர் இந்நால்வரே
மாண்புடையக்
குரவராம்.
நாளும் இன்னிசையால்
நாதனைப் போற்றிட
நாவால் பண்ணிசைக்க
தேவாரம் சூட்டினரே.
ஆதியும்
அந்தமுமில்லா
அருட்பெருஞ்
சோதியாம்
சிவனின் முன்னிலையில்
சிவனோடு
கலந்தனரே.