பன்முகம் கொண்ட பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்தான் இவ்வாறு கூறியுள்ளார்.
மனம் திறந்து இப்பேட்டியில் அவர் கூறியதாவது:
“இறுதி காலத்தில், எனது தந்தை உயிருக்குப் போராடிய சமயத்தில், சூஃபி ஆன்மிக குருவைச் சந்தித்தோம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரைக் காண நாங்கள் வருவோமெனக் கணித்தார். தந்தை காலமானபின், இது குறித்து மறந்துவிட்டோம். பத்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு நாள் சிங்கப்பூரிலிருந்து ஸ்டுடியோ உபகரணங்களை எடுத்துக்கொண்டு இந்தியா வருகையில், சுங்க வரித் துறையினரின் கடுமையான சோதனைக்கு உள்ளானோம்.
அச்சமயம் அங்கிருந்த மதகுருவின் மாணவர் ஒருவர் சோதனை நடைமுறைகளை எளிதாக்கி, எங்களுக்கு உதவ, நாங்கள் மீண்டும் அந்த சூஃபி மதகுருவைச் சந்தித்தோம். எனது ஸ்டுடியோவை அவர் ஆசீர்வதிக்க, எங்கள் வாழ்வில் எல்லாமே மாற ஆரம்பித்தன. இந்த மாதிரியான நம்பிக்கையை கடைப்பிடிக்க வேண்டுமென யாரும் சொல்லாவிட்டாலும், இயல்பாகவே இதை ஏற்றுக்கொள்ள, ஒருவித அமைதியை நான் உணர ஆரம்பித்தேன்.
அனைத்துமே நல்லபடியாக சென்றது. நிராகரிக்கப்பட்ட டியூன்ஸ், பிரார்த்தனைகளுக்குப் பிறகு ஏற்பட, சூஃபி கோயில்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம். அது சம்பந்தமான பல புத்தகங்கள் வாசித்து நிறைய கற்றுக்கொண்டது ஒரு அற்புதமான அனுபவம்.
இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்திய மக்கள் மிகவும் வெளிப்படையானவர்கள்.
‘வாழு! வாழவிடு!’ என்கிற கோட்பாட்டின்படி அனைவரையும் அரவணைத்து மகிழ்வுடன் வாழ்பவர்களாக இருக்கின்றனர்.