அமெரிக்காவில் ஏற்படும் அதீத வெப்பத்தை தாங்க முடியாமல் கரடி ஒன்று நீச்சல் குளத்தில் மூழ்கி நின்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து ஆங்காங்கே மழை பெய்ய வேண்டிய காலங்களில் வெயில் சுட்டெரிக்கிறது, வெயில் அடிக்கும் காலங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் அமெரிக்காவிலும் தினசரி 45 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கிறது.
இதனை மனிதர்களே தாங்க முடியாமல் ஏசியுடனே வாழ்ந்து வருகின்றனர். சாலையில் திரியும் விலங்குகள் என்ன செய்யும் பாவம். அப்படித்தான் அமெரிக்காவில் கரடி ஒன்று அங்கிருந்த நீச்சல் குளத்தை கண்டதும் இது தான் சரியான வழி என்று நினைத்து, உள்ளே ஒரு முங்கு முங்கியது. பயந்தபடியே நின்ற அந்த கரடி வேறு வழியில்லை இந்த வெப்பத்தை தாங்க இங்குதான் இருக்க வேண்டும் என நினைத்து முங்கிய படியே அசைந்தாடியது.
இதனை கண்டு ஆச்சரியமடைந்த போலீஸ் அதிகாரிகள் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர்.
பர்பங்க் போலீஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பலரும் என்ன ஒரு புத்திசாலிதனம் அந்த கரடிக்கு என கமெண்டு பதிவிட்டு வருகின்றனர்.