Bigg Boss celebrity who lost 17 lakhs to fraudsters.
Bigg Boss celebrity who lost 17 lakhs to fraudsters. 
செய்திகள்

மோசடி கும்பலிடம் 17 லட்சத்தை இழந்த பிக்பாஸ் பிரபலம்! நடந்தது என்ன?

கிரி கணபதி

பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற டேனியல் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தார். இவருக்கு வீடு குத்தகைக்கு விடுவதாகக் கூறி 17 லட்சத்தை மோசடி செய்துள்ளது பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம். 

சென்னையில் நோ புரோக்கர் என்ற பிரபல இணையதளம் மூலமாக வாடகைக்கு வீடு பார்த்து வந்த டேனியலை எஸ்.டி.எஸ்.கே என்ற நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்றும், அவர்கள் சென்னையில் பல இடங்களை பராமரித்து வருவதாகக்கூறி தமிழ்நாட்டு அரசிடம் பதிவு பெற்ற ஆவணத்தை காட்டியுள்ளனர். இவற்றை நம்பிய டேனியல் அவர்களை நம்பி 17 லட்சத்தைக் கொடுத்து வீட்டை குத்தகைக்கு எடுத்துள்ளார். 

குத்தகை பணம் மொத்தத்தையும் நிறுவனத்திடம் கொடுத்திருந்தாலும், அந்த நிறுவனம் வாடகை பணத்தை டேனியலிடமே கொடுத்து உரிமையாளருக்கு வாடகை வழங்குவதாகத் தெரிவித்தனர். இதற்கும் அவர் ஒப்புக்கொண்டதால், தொடக்கத்தில் முதல் மூன்று மாதங்கள் வரை வீட்டுக்கான வாடகையை சரியாக வழங்கியுள்ளனர். பின்னர் அவருக்கு வாடகையும் கொடுக்காமல் குத்தகை தொகையையும் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டனர். 

இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த டேனியல், காவல்துறையினரின் உதவியுடன் அந்நிறுவனம் குறித்த தகவல்களை சென்னை மாநகராட்சி முழுவதும் சேகரித்தபோது, பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது. சென்னையில் பலரிடம் இந்நிறுவனம் வீடு குத்தகைக்கு வழங்குவதாக பணம் பெற்று, வீட்டு உரிமையாளருக்கும் வாடகை வழங்காமல் குத்தகை பணத்தையும் பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. 

மேலும் நடிகர் பிரபுதேவாவின் தம்பியின் வீட்டில் ஏற்பட்ட இதே பிரச்சனைக்கும் இந்த நிறுவனம்தான் காரணம் எனவும் டேனியல் தெரிவித்துள்ளார். எனவே இந்த மோசடி நிறுவனம் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT