தமிழக அரசு, ஒவ்வொரு வருடமும் அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை குறித்து தமிழக அரசு, நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு பொங்கலுக்கு மளிகை உட்பட, 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த பொருள்களின் தரம் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. பலவேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தது . அதனை தவிர வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டது.
எனவே, வரும் பொங்கலுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய் ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலில் அந்த ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை வங்கியில் வழங்குவதாக செய்தி பரவியது. ஆனால் அதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதால் பணமாகவே கொடுப்பதாக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அந்த 1000 ரூபாயை வங்கியில் வழங்கினால், கிராமங்களில் வசிப்போர் பணம் எடுக்க மிகுந்த சிரமப்படுவர், ரொக்கமாக கொடுத்தால் தான், அரசுக்கு, மக்களிடம் வரவேற்பு கிடைக்கும்' என, ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால், வங்கி கணக்கு .இல்லாத கார்டுதாரர்களுக்கு, வங்கி கணக்கு துவக்கும் பணி மும்முரமாக நடந்தாலும், வரும் பொங்கலுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு, நாளை வெளியிட இருப்பதால் நாளை இது குறித்து தெரிந்துவிடும்