ஆரூர்தாஸ் 
செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரூர்தாஸின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி!

கல்கி டெஸ்க்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதுமை காரணமாக மறைவெய்திய திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸின் இல்லத்திற்கு நேரில் சென்று உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடன் சென்றனர்.

பிரபல பழம் பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தனது வயது மூப்பின் காரணமாக அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மதியம் 12 மணி வரை சென்னை தி.நகர் நாதமுனி தெருவில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் ஆரூர் தாஸின் உடல்,மந்தைவெளி கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

ஆரூர்தாஸ்

வாழ வைத்த தெய்வம் என்ற படம் மூலம் திரைத்துறைக்கு வசனகர்த்தவாக அறிமுகமான ஆரூர்தாஸ் அன்றைய உச்ச நட்சத்திரங்களான எம்ஜிஆர், சிவாஜி முதல் பல்வேறு திரை நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு வசனமெழுதி புகழ் பெற்றவர்.

சிவாஜி நடித்து பெரும் வெற்றி பெற்ற பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்துக்கு சொந்தக்காரர் ஆரூர்தாஸ். ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதி உள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு தான் திரைத்துறையில் இவரது சாதனையை கவுரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கியிருந்தார்.

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

முயற்சியும் திறமையும் நம் மதிப்பை உயர்த்தும்!

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT