“வீட்டில் ஆயுதங்கள் வைத்திருங்கள். குறைந்தபட்சம் ஒரு கூர்மையான கத்தியையாவது வைத்திருங்கள். எப்போது என்ன நடக்கும் எனத் தெரியாது. தங்களை தற்காத்துக் கொள்ள உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ளது. யாராவது உங்கள் வீட்டுக்குள் ஊடுருவி, உங்களை தாக்கினால் பதிலடி கொடுங்கள்” என்று பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகுர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கிலும் அவர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்.
பா.ஜ.க. எம்.பி.யான பிரக்யா சிங் இப்படிப் பேசியுள்ளது கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் நடைபெற்ற ஹிந்து ஜாகரண வேதிகையின் தென்பிராந்திய மாநாட்டில். கர்நாடகத்திலும் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது. அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால் ஆளும் கட்சி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. எனவே அவர் மீது உச்சநீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்படும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ்.