மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 
செய்திகள்

ஆதார் எண்ணை இணைத்தால்தான் கரண்ட் சப்ளை: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

கல்கி டெஸ்க்

தமிழகத்தில் மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் விரைவில் அதற்கான பணிகள் ஆரம்பமாகும் என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது:

 தமிழகத்தில் சொந்த வீடு வைத்திருக்கும் சிலர் வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இதனால் வாடகைதாரர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அதிகார பலம் இதைத் தவிர அரசியல்வாதிகள் பண பலம் வாய்ந்தவர்கள் இலவச மின்சார சலுகை பெறுவதற்காக ஒரே வீட்டிற்கு 3 அல்லது 4 மின்சார இணைப்புகளை பெற்றுள்ளார்கள்.ஆகவே தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

 மத்திய அரசு மானியம் வழங்கக்கூடிய திட்டங்களில் முறைகேட்டை தடுப்பதற்கு பயனாளிகளின் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட திட்டங்களுடன் இணைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

அந்த வகையில் தமிழகத்தில் இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தடுப்பதற்காக ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான பணிகள்  மிக விரைவில் ஆரம்பமாகும்.

 - என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT