அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில், அவரது சொத்துக்களியும் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.
இதை எதிர்த்து சி.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், தனது வங்கிக் கணக்கை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்ததார். இந்த மனுமீதான விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அதில் வருமான வரித்துறை சார்பில் வாதிட்டபோது, விஜயபாஸ்கர் முறையான வருமானவரி செலுத்தாததால் அவரது சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில், விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக வருமானவரித்துறை விளக்கமளித்தது.
இதையடுத்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் தள்ளிவைத்தார்.