செய்திகள்

உலக வெப்பமயமாதலால் இரு மடங்கு வேகத்தில் உருகும் பனிப்பறைகள்!

கல்கி டெஸ்க்

றைவனின் அருட்கொடைகளில் ஒன்று இமயமலை பனிப்பறைகள். இந்தப் பனிப்பறைகளின் மூலமாகத்தான் கோடிக்கணக்கான ஜீவராசிகள் குடிநீர் ஆதாரங்களைப் பெற்று வருகின்றன. ஆனால், சமீப காலமாக ஏற்பட்டுவரும் உலக வெப்ப மயமாதலின் காரணமாக அதிவேகமாக இந்தப் பனிப்பாறைகள் உருகத் தொடங்கி உள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சீராக உருகி வந்த இந்தப் பனிப்பறைகள் தற்போது இரு மடங்கு வேகத்தில் உருகத் தொடங்கி உள்ளன. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இமயமலை பனிப்பாறைகளின் அதிகப்படியான இழப்பை முதல்முறையாக ஆவணப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக, இங்கிலாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம், சீன அறிவியல் அகாடமி, ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கார்னகி மெலன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், 2000 முதல் 2020 வரை இருபது ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உள்ள ப்ரோக்லேசியல் ஏரிகள் எண்ணிக்கையில் 47 சதவீதமும், பரப்பளவில் 33 சதவீதமும், அளவு 42 சதவீதமும் அதிகரித்தன. இதனால் நிலப்பரப்பின் மேற்பரப்புக்கு கீழே உள்ள பனிப்பாறைகள் அதிகப்படியாக உருகி வருவதாகவும், இது சுமார் 57 கோடி யானைகளின் எடைக்குச் சமம்; அதாவது உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையை விட ஆயிரம் மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறி இருக்கிறார்கள்.

இந்த ஆய்வு குறித்து, ‘நேச்சர் ஜியோசயின்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், மத்திய இமயமலையில் மிகப்பெரிய அளவில் உருகிவரும் பனிப்பாறைகள் குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது. அங்கு பனிப்பாறைகள் உருகுவதால், அருகிலுள்ள ஏரிகளில் நீர்வரத்து மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மேலும், நீருக்கடியில் நிகழும் பனிப்பாறை மாற்றங்களை செயற்கைக்கோள்களால் காண இயலாததால், அவை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. ஏனென்றால், பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தரவு மூலம் ஏரி நீரின் மேற்பரப்பை மட்டுமே அளவிட முடியும். ஆனால், நீருக்கடியில் உள்ள பனியை தண்ணீரால் மாற்ற முடியாது என்று கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வறிக்கையில், ‘பனிப்பாறை நீரியல் மாதிரிகளுக்கு முக்கியமான தரவுகளை வழங்குவதாகவும், மலைப்பகுதியில் நீர் வள மேலாண்மைக்கு ஆதரவளிக்கிறது’ என்றும் கூறி உள்ளனர்.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT