செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள்; செப்டம்பர் 7-ல் வெளியீடு!

கல்கி

நாட்டில் மருத்துவ இளநிலை படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என  தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

-இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்ததாவது;

நாட்டில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ல் நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் இந்த நீட் தேர்வுக்கான  முடிவு செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப் படும்.

-இவ்வாறு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இத்தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

செல்வங்களையும் நற்கதியையும் அளிக்கும் கருட சேவை தரிசனம்!

Second-Hand பைக் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

மனிதநேய ஒளிப்படங்களுக்கான பன்னாட்டுப் பரிசுப் போட்டி!

உங்கள் வீட்டில் திருமணமா? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்!

SRH Vs KKR: ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறப்போவது யார்?

SCROLL FOR NEXT