வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் வானிலை திடீரென குளிராக மாறி உள்ளது. நேற்று மாலையில் இருந்து குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.
சென்னை என்றாலே எப்போதுமே வெப்பமாக தான் இருக்கும். இந்தியாவில் இருக்கும் சூடான நகரங்களில் சென்னையும் ஒன்று. சென்னை சூடாக இருக்கிறது என்று குறை சொல்லி வருவார்கள் . இந்த நிலையில்தான் இன்று பலரும் வியக்கும் அளவிற்கு சென்னையில் திடீரென வானிலை குளிராக மாறி உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைகொட்டி தீர்த்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.சென்னையில் இன்று அதிகாலை பல இடங்களில் 17 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. இன்று இரவும் சென்னையில் குளிரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. சென்னையில் இருந்து 150 கிமீ தூரத்தில் இந்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டு உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்படி நகராமல் நின்றதுதான் சென்னையில் தற்போது குளிர்ச்சியான வானிலைக்கு காரணம். இந்த தாழ்வு மண்டலம் கடலில் இருக்கிறது. இந்த தாழ்வு மண்டலம், குளிர்ந்த காற்றை சென்னையை நோக்கி நகர்த்தி உள்ளது. இந்த குளிர்ந்த காற்றுதான் தற்போது சென்னையில் நிலவும் குளிர்ச்சியான வானிலைக்கு காரணம்.