தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மெட்டா நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் ஒருவர் 3 கோடி சம்பளத்தை உதறித்தள்ளி ராஜினாமா செய்துள்ளார்.
இந்த காலத்தில் வேலை கிடைப்பது பெரும் திண்டாட்டமாக இருந்து வரும் நிலையில், இவ்வளவு ரூபாய் சம்பளத்தை வாங்கினவர் என் வேலையை விட வேண்டும்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொரு சாரார் சாதாரண நபர்களுக்கு தான் கஷ்டம் வருமா? கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களுக்கு கஷ்டம் வராதா? எந்த வேலையாக இருந்தாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும், அழுத்தங்களும் கஷ்டங்களும் தாங்கிக்கொள்ள முடியாதவை எனக் கூறுகின்றனர்.
மெட்டா நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரியும் 28 வயதான யூரிக் என்பவர், அவர் வேலையில் இருந்தபோது திடீரென ஒரு நாள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்த வேலையில் இருந்த அழுத்தம் தான் காரணம் என அவர் கூறுகிறார். வேலை நேரத்திற்குப் பிறகும் அந்த அழுத்தத்திலிருந்து விடுபட முடியாமல் துன்பப்பட்டதால் 3 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை எனக்கு இந்த வேலை வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். தினசரி வேலை நேரம் முடிந்த பிறகும் அந்த பதட்டத்தில் இருந்து வெளிவர முடியாததால் இந்த வேலையை விட்டு வெளியேறுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
கோவிட் காலத்திலிருந்து இத்தகைய சூழலை தான் அனுபவித்து வருவதாகவும், காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து வேலை செய்வதால், வேலை நேரம் முடிந்த பிறகும் அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. மேலும் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வார இறுதியில் மேலதிகாரிகள் அவரது வேலையை விமர்சிப்பதாக கோபப்படுகிறார். எனவே எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை எனக்கு அழுத்தமாக இருக்கிறது என்றால் நான் வெளியேறுகிறேன் எனக் கூறிவிட்டு ராஜினாமா செய்துள்ளார் இந்த நபர்.