செய்திகள்

பழ.நெடுமாறன் பேசுவது மக்களை முட்டாளாக்கும் செயல்! கருணா மறுப்பு!

கல்கி டெஸ்க்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்தது குறித்து கருணா தற்போது கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து கருணா விளக்கமும் அளித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் களத்தில் மடிந்தது என்பது உண்மையான விஷயம். விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக தவறான வதந்திகளைப் பரப்பி உலக மக்களை முட்டாளாக்கும் செயலாகத் தான் பழ.நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்த கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்த போது அவரது உடலை அடையாளம் காட்டியவர் தான் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், ஈழத் தமிழர்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது.

அவருடன் தொடர்பில் தான் உள்ளோம். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது. தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். என பழ.நெடுமாறன் கூறினார்

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

பிரண்டைத் துவையல் பெருகும் பலன்கள்!

பாகிஸ்தானின் மறைமுக எச்சரிக்கை... சாம்பியன்ஸ் ட்ராபி இந்தியாவில் நடைபெறவுள்ளதா?

அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்கள் விலை உயரும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

SCROLL FOR NEXT