டூவீலர்
டூவீலர் 
செய்திகள்

டூவீலர் ஓட்டும்போது ஹெல்மெட் போடலையா? அபராதம் எவ்வளவு தெரியுமா?

கல்கி டெஸ்க்

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;

சென்னையில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் இம்மாதம் 28-ம் தேதியிலிருந்து அமல்படுத்தபட உள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டிச் செல்பருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் ஸ்டாப் லைன் விதிமீறலுக்கு ரூ.500 முதல் ரூ. 1500 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், பைக் ரேஸில் ஈடுபட்டு முதல் முறை பிடிபட்டால் 15 ஆயிரம் அபராதமும், 2-வது முறை 25 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.

வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போன் பேசி சென்று முதல் முறை பிடிபட்டால் ரூ 1000 அபராதம். அதன்பிறகு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும்  மது அருந்தி இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுபவருடன் மட்டுமல்லாமல், பின்னிருக்கையில் அமர்ந்து செல்வோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக நீதி மன்ற உத்தரவு கடைபிடிக்கப்படும். தி.நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, என்.எஸ்.சி போஸ் சாலை, ஆகிய பகுதிகளில் தீபாவளி பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

கண்காணிப்பு டவர் அதிக அளவில் வைக்கப்பட உள்ளது. மொபைலில் சந்தேகமான நபரை புகைப்படம் எடுத்து ஒப்பிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. பாடி- ஒன் கேமரா காவலர்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT