செய்திகள்

மாதாந்திர பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

கல்கி டெஸ்க்

லைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தபோது, முதல்வர் ஸ்டாலினுக்கு  லேசான உடல் சோர்வு இருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் முடிந்த பிறகு பிற்பகல் 1.30 மணிக்கு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டார்.

அதனையடுத்து, உடல் சோர்வு மற்றும் மாதாந்திர மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மாலையில் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு முதல்வர் ஸ்டாலினுக்கு இரைப்பை குடல் சம்பந்தமான சோதனைகள் செய்யப்பட வேண்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்த பிறகு முதல்வர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடன் இருக்கிறார். இதுபோன்ற பரிசோதனைகளுக்காக தமிழக முதல்வர் வழக்கமாகச் சென்று வருவதுதான் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதனிடையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சிகிச்சைகள் முடிந்ததும் நாளை (ஜூலை 4) வீடு திரும்புவார்’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

முயற்சியும் திறமையும் நம் மதிப்பை உயர்த்தும்!

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

பிரண்டைத் துவையல் பெருகும் பலன்கள்!

SCROLL FOR NEXT