Virat kohli
Virat kohli 
செய்திகள்

பெட்டிங் செயலி விளம்பரத்தில் விராட் கோலி.. தொடர்கதையாகும் Deepfake விவகாரம்!

பாரதி

ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்களை deepfake AI மூலம் எடிட் செய்து பல வீடியோக்கள் வெளியானது. இதனையடுத்து பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை Deepfake AI எடிட் மூலம் பெட்டிங் செயலி விளம்பரத்தில் நடிப்பது போன்ற வீடியோவை  உருவாக்கி இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் இந்த AI தொழில்நுட்பம் புகழ்பெற்ற ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக சில செயலிகள் வந்ததிலிருந்து இந்த AI அடுத்தக்கட்டத்திற்கு சென்றுவிட்டது. புதிய புதிய AI கருவிகள் கண்டுப்பிடித்த வண்ணம் உள்ளன. அதேபோல் அதற்கான நிதியும் ஒருபக்கம் குவிந்து வருகிறது. இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் இதே AI, பல இன்னல்களைக் கொண்டு வருகிறது. இதனால் பல பிரச்சனைகளைப் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை சந்திக்கின்றனர்.

AI துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் இந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றவருமான ஜெஃப்ரி ஹிண்டன் கூறியதாவது, “வருங்காலத்தில் AI துறையால் பல ஆபத்துகள் வர வாய்ப்புள்ளது. எனவே, AI என்று வரும்போது அரசும் சரி, பெரிய நிறுவனங்களும் சரி மிக மிக கவனமாக இருக்க வேண்டும்” என்று ஏற்கனவே எச்சரிக்கை செய்தார். இந்த எச்சரிக்கைகளை விட்ட பின்னரும் AI-யால் பல சிக்கல்கள் வந்துக்கொண்டுத்தான் இருக்கின்றன.

இந்திய பிரதமர் மோதி முதல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரை அனைவரையும் AI மூலம் தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவு செய்தனர். இதனால் அவர்களே கவலை தெரிவித்திருந்தனர். இதனையடுத்து திரைத்துறை பிரபலங்களும் AI சர்ச்சையில் சிக்கினர். இப்போது விளையாட்டு துறை பிரபலங்களும் சிக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ஓர் உதாரணம்தான் விராட் கோலி. விராட் கோலியை AI deepfake edit செய்து ஒரு வீடியோ உருவாக்கியுள்ளனர். அந்த வீடியோவில் விராட் கோலி பெட்டிங் செயலியை ப்ரொமோட் செய்யும் விதமாக பேசியிருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, “நான் சிறிய முதலீடு செய்து பெரும் லாபம் பெற்றேன். நீங்களும் உடனே முதலீடு செய்து லாபத்தை பெறுங்கள்.” இந்த வசனத்தை விராட் கோலி சொல்வது போல் வீடியோ இருந்தது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து இது ஒரு deepfake வீடியோ என்பது தெரியவந்தது. இதனையடுத்து இணையவாசிகள் இந்த வீடியோவை நீக்கச் சொல்லியும் உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்ததை அடுத்து வீடியோ நீக்கப்பட்டது .

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT