ஆந்திரா மாநிலத்தில் 6 வருடங்களாகக் கூலி வேலை செய்து கொண்டே, வேதியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் பாரதி என்ற பெண்.
திருமணம் ஆனது, குழந்தைகள் ஆனது என வாழ்க்கையை முடக்காமல் படிப்பை தொடர்ந்து அசத்தியுள்ளார். கணவரின் உதவியுடன் அடுத்தக்கட்ட முயற்சியை எடுத்து பள்ளி, கல்லூரி என படிப்படியாக முன்னேறினார். பாரதிக்கு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிவதே கனவாக இருந்தது. ஆனால் திருமணம் முடிந்ததாலும், குடும்ப வறுமை காரணமாகவும் தினசரி கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து வந்தார். ஆனாலும் படிப்பை விடக்கூடாது என நினைத்த பாரதி தனது அசாத்திய திறமையால் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
இதற்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். பொதுவாகவே திருமணமான பெண்களுக்கு பல கமிட்மெண்ட்கள் வந்துவிடும். மேலும் பொறந்த வீடு, புகுந்த வீடு, அக்கம் பக்கம் விடு என பல தடைகள் வரும். ஆனால் பாரதி தடை அதை உடை என சாதித்து காட்டியுள்ளார். ஆனால் தற்போது பட்டம் பெற்ற பின்னரும் தனக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என பாரதி வேதனையாக தெரிவித்துள்ளார்.