ஆந்திராவில் அமைந்துள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலையை, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை திறந்து வைக்க உள்ளார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து தனது கல்வி அறிவால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்.
சட்டமேதை என்றழைக்கப்படும் அம்பேத்கர் சிறந்த இந்திய சமூக சீர்திருத்தவாதி, சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதியான டாக்டர். பி.ஆர்.க்கு மரியாதை செலுத்தவும், அவருக்கு அஞ்சலி செலுத்தவும், அத்தகைய உயரமான பீடத்தில் அவரின் முழு உருவச்சிலை 81 அடி உயர பீடத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது.
அம்பேத்கர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார், பின்னர் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பியாகவும் பணியாற்றினார். பீடத்தின் உயரம் அவரது பிறந்தநாளின் 81 வது ஆண்டைக் குறிக்கிறது.
இந்த சிலை கிருஷ்ணா நதிக்கு அருகில் அமைந்துள்ளது, இது பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடியது மற்றும் நகரத்தின் அடையாளமாக செயல்படுகிறது. உலகின் உயரமான அம்பேத்கர் சிலையின் முக்கியமான 12 விஷயங்களை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.
ஸ்வராஜ் மைதானத்தில் அமைந்துள்ள அந்த சிலைக்கு சமூக நீதிக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
81 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்தில், 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது.
ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிலைக்காக சுமார் 400 டன் எடையிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜயவாடாவில் உள்ள இந்த அம்பேத்கரின் சிலையானது, நாட்டின் உயரமான மதச்சார்பற்ற தலைவரின் சிலையாகவும் கருதப்படுகிறது.
உலகின் இரண்டாவது உயரமான அம்பேத்கர் சிலை, அண்டை மாநிலமான தெலங்கானாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் உயரமான 50 சிலைகளுக்கான பட்டியலிலும் இந்த புதிய சிலையும் இடம்பெற்றுள்ளது.
உலகிலேயே உயரமான அம்பேத்கர் சிலை என்ற பெருமையை பெறும் இந்த சிலை, முழுவதுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
சிலைக்கு கீழே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அம்பேத்கர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் எல்.ஈ.டி திரைகளில் காட்சிப்படுத்தப்படும்.
அம்பேத்கர் சிலை அமைந்துள்ள பகுதியில் 2000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் அமைந்துள்ளன.