New Feature in Gmail. 
அறிவியல் / தொழில்நுட்பம்

ஜிமெயிலில் புதிய வசதி: ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்கள் இனி ட்ராக் செய்ய முடியும்!

க.இப்ராகிம்

கூகுள் இமெயில் வழியாக இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை ட்ராக் செய்ய முடியும்.

உலகில் எந்த மூலையில் கிடைக்கும் பொருளாக இருந்தாலும் சரி, அவற்றை வீடு தேடி வர செய்துவிட முடியும். இப்படி ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து இருக்கிறது. மக்கள் பெரும்பாலானோர் உடைகள், செல்போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் என்ற பல்வேறு வகையான பொருட்களை இணைய வழியாக ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரம் சில முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கூட தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தவறான பொருட்களை டெலிவரி செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கின்றன. இந்த நிலையில் ஆன்லைன் வழியாக பொருட்களை ஆர்டர் செய்யும் நபர்களுக்கு சரியான பொருட்கள், சரியான நேரத்தில் வருகிறதா என்பதை உறுதி செய்ய கூகுள் நிறுவனம் தற்போது புதிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்யும் நபர்கள் தங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் மற்றும் எந்த தேதியில் அவை டெலிவரி செய்யப்படும் என்பதை டிராக் செய்து தெரிந்து கொள்ள முடியும்.

இதற்கு கூகுள் இமெயில் செயலியை ஓபன் செய்யாமலேயே டெலிவரி பற்றிய தகவல்களை பெற முடியும். மேலும் டெலிவரி தேதி மாறினால் கூகுள் இமெயிலில் இன்பாக்ஸ் பக்கத்தில் ஆரஞ்சு நிறத்தில் டாப் மெசேஜாக அவை காண்பிக்கப்படும்.

இதற்கு கூகுள் இமெயில் செயலுக்குச் சென்று செட்டிங் பக்கத்தில் நுழைய வேண்டும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Turn on packing tracking என்ற ஆப்ஷனை எனெபிள் செய்தால், அதன் பிறகு ஆர்டர் செய்யும் பொருட்களை ட்ராக் செய்ய முடியும் என்று கூகுள் இமெயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது இந்த முயற்சி அமெரிக்காவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகளுக்கும் இவை விரிவு படுத்தப்பட உள்ளது.

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

முயற்சியும் திறமையும் நம் மதிப்பை உயர்த்தும்!

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT