அறிவியல் / தொழில்நுட்பம்

Messenger-ல் வரவிருக்கும் புதிய AI அம்சம்!

கிரி கணபதி

மெட்டா நிறுவனம் இதுவரை எவ்விதமான ஜெனரேட்டிவ் AI தயாரிப்புகளையும் வெளியிடவில்லை. ஆனால் பேஸ்புக் மெசஞ்சரில் AI மூலமாக உருவாக்கப்படும் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தலாம் என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் பேஸ்புக் மெட்டா ஒரு முக்கிய நிறுவனமாக உருவெடுத்து வருகிறது. AI பயன்படுத்தி நம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதையும், நமது டிஜிட்டல் அனுபவங்களை எவ்வாறு சிறப்பாக வடிவமைக்க முடியும் என்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது மெட்டா நிறுவனம். முன்பு பேஸ்புக் என அழைக்கப்பட்ட இந்த நிறுவனம், 2021ல் மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மேம்பட்ட AI தொழில்நுட்பங்கள் மற்றும் Metaverse தொடர்பான கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான வேலைகளை கையிலெடுத்தது இந்நிறுவனம். 

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், மெட்டா AI-ன் துணைத் தலைவரான அகமத், பேஸ்புக் மெசஞ்சரில் அதன் பட உருவாக்க மாதிரியைப் பயன்படுத்தி பயனர்கள் ஸ்டிக்கர்களை உருவாக்க அனுமதிக்கும் என ஊழியர்களிடம் கூறினார். இது ChatGPT போலவே செயல்படும் என்றும், இந்த புதிய அம்சத்தின் மூலம் மெசஞ்சர் பயனர்கள் தாங்கள் வெளிப்படுத்த விரும்பும் புகைப்படங்களை எளிதாக உருவாக்கி பயன்படுத்தலாம் என அகமத் அல் தாலே கூறினார். 

நீங்கள் உள்ளிடும் எந்த படத்தையும் உங்கள் விருப்பம் போல மாற்றியமைக்கும் AI மாடல்களில் மெட்டா வேலை செய்து வருகிறது. படத்தின் ரெசல்யூஷனை மாற்றுவது அல்லது சாதாரண புகைப்படத்தை ஓவியம் போல மாற்றுவது போன்ற வேடிக்கையான விஷயங்களை இதில் செய்ய முடியும் என்கிறார்கள். 

ஏற்கனவே AI-ஆல் இயக்கப்படும் கருவிகளை உருவாக்குவதற்கு ஒரு புதிய குழுவை ஜுக்கர்பர்க் அறிவித்த போது, மெட்டா அதன் சொந்தத் தயாரிப்புகளில் உருவாகிக் கொண்டிருக்கும் AI தொழில்நுட்பத்தை சுட்டிக்காட்டியிருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த ஓர் அறிவிப்பில் மார்க் ஜுக்கர்பெர்க் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெசஞ்சரில் AI அம்சங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தைப் பற்றி விவரித்திருந்தார். இதைத்தொடர்ந்துதான் தற்போது மெசஞ்சர் செயலியில் இந்த புதிய ஏஐ அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கூட்டத்தில் ஜெனரேட்டிவ் AI தவிர whatsapp, instagram போட்டியாளர்கள் பற்றியும், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய விஷன் ப்ரோவின் தனது எண்ணங்கள் பற்றியும் மார்க் ஜுக்கர்பெர்க்  வெளிப் படுத்தினர். இது மெட்ட நிறுவனத்தின் அகுமெண்டட் ரியாலிட்டி எனப்படும் AR ஹெட்செட் டுகளுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT