Remember your Gmail password? Brothers. 
அறிவியல் / தொழில்நுட்பம்

கெடு நெருங்குகிறது! ஜிமெயில் பாஸ்வேர்டு ஞாபகம் இருக்கா? நண்பர்களே!

கிரி கணபதி

நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் அக்கவுண்டுகளை கூகுள் நிறுவனத்தின் புதிய டெலிட் பாலிசியின் கீழ் நிரந்தரமாக தடை செய்யப்படவுள்ளது. எனவே நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 

இந்தியாவில் கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமான நபர்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் தற்போதைய இணைய உலகில் வங்கி சேவையில் தொடங்கி ஆதார் கார்டு சேவைகள் வரை ஜிமெயில் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. இதனால் ஜிமெயில் கணக்குகள் பற்றி அதிகமாக தெரியாத நபர்களும் அதை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. 

இவர்களில் பல கோடி நபர்கள் gmail கணக்கு தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்திவிட்டு, அதை அப்படியே விட்டு விடுகின்றனர். இதில் பலருக்கு தங்களுடைய ஜிமெயில் கணக்கில் பாஸ்வேர்டு கூட ஞாபகம் இருக்காது. இது போன்ற செயல்கள் நமக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், தினசரி கோடிக்கணக்கான மக்களின் அக்கவுண்ட்டை பராமரிக்கும் கூகுள் நிறுவனத்திற்கு இது பெரும் தலைவலியாக இருக்கும். இதனால் பயன்படுத்தாத கணக்குகளை நீக்குவதற்காகவே கூகுள் நிறுவனம் புதிய அக்கவுண்ட் பாலிசியைக் கொண்டுவந்துள்ளது. 

இந்த பாலிசியின் கீழ் கடந்த 24 மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகள், நிரந்தரமாக டெலிட் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன்படி ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் யூடியூப், கூகுள் டிரைவ், கூகுள் ஃபோட்டோஸ், காலண்டர் போன்ற அனைத்து கணக்குகளும் நிரந்தரமாக நீக்கப்படும். மேலும் அதில் உள்ள தரவுகள், டேட்டாக்கள், வீடியோக்கள் என அனைத்துமே கிடைக்காமலேயே போய்விடும். 

இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இப்படி டெலிட் செய்யப்படும் பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்தே தொடங்கப்பட உள்ளது. எனவே இன்னும் கால அவகாசம் இருப்பதால், நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தத் தொடங்குங்கள். 

உங்களுடைய ஜிமெயில் கணக்கு டெலிட் ஆக வேண்டாம் என நினைத்தால், உடனடியாக அதை பயன்படுத்தத் தொடங்குங்கள். உங்களின் ஜிமெயில் கணக்கை லாகின் செய்து யாருக்காவது டம்மி இமெயிலாவது அனுப்புங்கள். இப்படி செய்ய மறந்துவிட வேண்டாம். அதேபோல இனி வரும் காலங்களிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது உங்கள் கணக்கை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

ஒருவேளை உங்களுக்கு ஜிமெயில் கணக்கு வேண்டாம் என்றால் அதில் இருக்கும் டேட்டாக்களை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அவை திரும்பக் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இப்படி பல சிக்கல்கள் இந்த பாலிசியில் இருக்கிறது‌. ஒருவேளை உங்களுடைய ஜிமெயில் கணக்கில் பாஸ்வேர்ட் மறந்திருந்தால், ஃபர்கெட் பாஸ்வேர்ட் தேர்வு செய்து உடனடியாக உங்கள் ஐடியை ரெக்கவர் செய்யுங்கள். அதன் பிறகு புதிய பாஸ்வேர்ட் கொடுத்து உங்கள் கணக்கை மீண்டும் பெறலாம். 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT