அறிவியல் / தொழில்நுட்பம்

OpenAi நிறுவனத்தின் அடுத்த டார்கெட் இவங்கதான்!

கிரி கணபதி

ChatGPT செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய OpenAi நிறுவனம், ஆண்ட்ராய்டு பயனர்களைப் பார்த்து 'அடுத்தது நீங்கள்தான்' என்று கூறியுள்ளது.

சமீபத்தில்தான் OpenAi நிறுவனம் iOS இயங்குதளத்தில் பயன்படுத்தும் ChatGPT செயலியை அறிமுகம் செய்தது. அடுத்த கட்டமாக கூடிய விரைவில் இதன் ஆண்ட்ராய்டு வெர்ஷனை வெளியிடுவோம் என்பதை உணர்த்த, "ஆண்ட்ராய்டு பயனர்களே அடுத்தது நீங்கள்தான்" என்று OpenAi நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, இந்த செயலியை நாம் இலவசமாகப் பயன்படுத்தலாமா? அல்லது இதற்கும் சந்தா செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த செயலியை முற்றிலும் இலவசமாக பயன்படுத்தலாம். மேலும் இந்த செயலி மூலமாக பல சாதனங்களுக்கு இடையே உள்ள ஹிஸ்டரியை சிங்க் செய்து அனைத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியும் என, OpenAi தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதில் புதிய அம்சமாக ஓபன் சோர்ஸ் ஸ்பீச் ரெகக்னிஷன் இருப்பதாகவும். இதைப் பயன்படுத்தி ஒருவர் நிஜமாகவே உரையாடுவது போல் இந்த செயலியை பயன்படுத்தி உரையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ChatGPT சந்தாதாரராக இருந்தால், அவர்களுக்கென்று பிரத்தியேக அணுக்கள் கிடைக்கு மென்றும் OpenAi தெரிவித்துள்ளது. அவர்களுக்கு பல புதிய அம்சங்களின் முன்கூட்டிய அணுகல்கள் விரைவாக கிடைக்கும் என்ற முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. 

இதன் வழியாக நாம் உடனடி பதில்களைத் துல்லியமாகப் பெற முடியும். எந்த விளம்பரங்களும் இன்றி தகவல்களைப் பெறலாம். பயணத்திட்டங்கள், சமையல் குறிப்புகள் உள்ளிட்டவற்றை நமக்கு வழங்குவதில் சிறந்த ஆலோசகராக இதை நாம் பயன்படுத்தலாம். நமக்கு வேண்டியதை அதில் உள்ளீடு செய்தால், அதற்கு ஏற்றவாறு சிந்தித்து நமக்கு வேண்டியதை உடனடியாகச் சொல்லிவிடும். நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம் எதுவாக இருந்தாலும், அதைப்பற்றிய கருத்துக்களை கண நேரத்தில் நமக்குக் காட்டிவிடும் ChatGPT.

இதைப் பயன்படுத்தி உங்களுடைய கற்கும் திறனை நீங்கள் அதிகரிக்கலாம். புதிய மொழிகள், நவீன வரலாறு மற்றும் பலவற்றை ஆராய்ச்சி செய்து மதிப்பீடுகளை வழங்குவதற்கும் இது பல வகையில் உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஆண்ட்ராய்டு திறன்பேசியில் பயன்படுத்த பலரும் ஆர்வமாய் இருந்து வருகின்றனர். 

எனவே OpenAi நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஆண்ட்ராய்டு பயனர்களை குதூகலத்தில் அழுத்தியுள்ளது.

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

முயற்சியும் திறமையும் நம் மதிப்பை உயர்த்தும்!

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT