ஸ்பெஷல்

கேரளாவில் அதிகரிக்கும் தக்காளி காய்ச்சல்; அண்டை மாநிலங்கள் பதற்றம்!

கல்கி

கேரளாவில் சமீபத்தில் 'தக்காளி காய்ச்சல்' எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவரின் உடலில் தக்காளி போன்று சிவப்பு நிற கொப்புளங்கள் ஏற்படுவதால் இது 'தக்காளி காய்ச்சல்' என அழைக்கப்படுகிறது. குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடிய இந்நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வவ்வாளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த அரிய வகை வரைஸ் காய்ச்சல், கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவை ஆட்டிப் படைத்தது. இந்நிலையில் மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை தெரிவித்ததாவது:

கேரளாவில் நிபா அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இதை அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கும் தெரிவித்துள்ளோம்.

-இவ்வாறு  கேரள சுகாதாரத்துறை சார்பில்  தெரிவித்துள்ளது. 

கேரளாவில் தக்காளி காய்ச்சல் மற்றும் நிபா வைரஸ் பரவியுள்ளதால், அண்டை மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இவை தாக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விதியை நிர்ணயிப்பது நமது கடமையே!

முன்பின் தெரியாதவர் கொடுக்கும் உணவை ஏன் உண்ணக்கூடாது தெரியுமா?

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்… ஹீரோ யார்?

சிங்கத்தை ஏன் வேட்டையாடுகிறார்கள் தெரியுமா? 

வாய்வு கோளாறுகளுக்கு நிவாரணம் தரும் சோம்பு!

SCROLL FOR NEXT