ஸ்பெஷல்

தருமபுர ஆதீனம்; கொடியேற்றத்துடன் பட்டினப் பிரவேச விழா தொடக்கம்!

கல்கி

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் குருபூஜையின்போது பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதின குரு மகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே பட்டணப் பிரவேசத்திற்கு விதித்த தடையை நீக்க முதல்வரை நேரில் சந்தித்து ஆதீனங்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, பட்டணப் பிரவேச நிகழ்விற்கான தடையை தமிழக அரசு நீக்கியது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இம்மாதம் 22-ம் தேதி ஆதீன மகாகுரு சன்னிதானத்தை பல்லக்கில் அமர்த்தி சுமக்கும் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

முயற்சியும் திறமையும் நம் மதிப்பை உயர்த்தும்!

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT