ஸ்பெஷல்

நடிகர் விஜயின் சொகுசு கார் வரி அபராதம்: கோர்ட் அதிரடி!

கல்கி

நடிகர் விஜய் தனது சொகுசு கார் இறக்குமதி வரி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இறக்குமதி செய்த காருக்கு 2019-ம் ஆண்டு ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என்றும், அப்படி செலுத்தாத பட்சத்தில் அபராதம் விதிக்கலாம் என்றும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ.எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கில், விஜய் தரப்பில் 7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. ஆனால் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30,23,609 ரூபாய் செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை உத்தரவிட்டது

அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுரேஷ்குமார் இன்று தீர்ப்பளித்து உத்தரவிட்டதாவது;

நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019-ம் ஆண்டு ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. அப்படி செலுத்தி இருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம்.

-இவ்வாறு நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்து வணிக வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.. இதையடுத்து, தனது சொகுசு கார் நுழைவு வரிக்கான  அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு இன்று முடிக்கப்பட்டது.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT