ஸ்பெஷல்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்; இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு!

கல்கி

பிரான்ஸ் நாட்டில் 2 கட்டமாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் பிரான்ஸ்  அரசியலில் 2-வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை இமானுவேல் பெற்றுள்ளார்.

பிரான்ஸில், அதிபரின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  கடந்த 10-ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நேற்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பிரெஞ்ச் மக்களும் தங்களது வாக்குகளை செலுத்தினர். உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இமானுவேல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இமானுவேல் மேக்ரான் பெருவாரியான வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 20 ஆண்டுகளில் 2-வது முறையாக அதிபர் தேர்தலில் மேக்ரான் வெற்றி பெற்றதால், ஈபிள் கோபுரம் அருகே அவரது ஆதரவாளர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.இமானுவேல் மேக்ரானுக்கு கடும் சவாலாக திகழ்ந்த மரைன் லு பென், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதனிடையே தன்னை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த இமானுவேல், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களில் கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 2-ம் முறையாக வெற்றிபெற்ற இமானுவேல் மேக்ரானுக்கு பல நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT