ஸ்பெஷல்

6 துபாய் நிறுவனங்களுடன் தமிழகம் ஒப்பந்தம்; முதல்வர் ஸ்டாலின்!

கல்கி

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

துபாயில் நடந்து வரும் சர்வதேச தொழிற்கண்காட்சியில், தமிழகத்தில்  தொழில் தொடங்க 6 துபாய் நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கிட்டதட்ட 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அந்த 6 நிறுவனங்களோடு நேரடியாக ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம். அதனால் அவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி தொழில்களை எளிதாக நடத்த முடியுமென்றும், அதற்கான சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கித் தருகிறோம் என்று எடுத்துச் சொன்னோம்.

அந்த 6 நிறூவனங்கலும் அந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். மேலும் இந்த தொழில்களைத் தொடங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து ஒப்பந்தம் போட்டுள்ளோம். ஆனால் குறிப்பிட்ட முன்னதாகவே அந்நிறுவனங்களைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை செய்து வருகிறோம்.

-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வாங்க விமானத்தில் பறக்கலாம்!

ஹேர் கலரிங் பண்ணிக்கொள்ள ஆசையா? கவனிக்க வேண்டியது என்ன? எந்த வகையான கலரிங் நல்லது?

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

SCROLL FOR NEXT