விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் தரவரிசை: பும்ராவுக்கு 2-ம் இடம்!

கல்கி

சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களில் டிரென்ட் போல்ட் 704 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.இந்தியாவின் பும்ரா 703 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

-இதுகுறித்து சர்வதேச தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற விபரங்கள்;

 இந்தியா vs இங்கிலாந்துக்கு இடையில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரால் தற்போதைய சர்வதேச தரப் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இங்கிலாந்திற்கு எதிரான 3-வது போட்டியில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் பும்ரா கலந்து கொள்ள இயலாமல் போனதால், அவர் வேகப் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். தற்போது பும்ரா 703 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் டிரென்ட் போல்ட் 704 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் உள்ளனர்.

மேலும் ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4-ம் இடத்திலும் ரோகித் சர்மா 5-ம் இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் 13 இடங்கள் முன்னேறி தற்போது 8-வது இடத்தில் உள்ளார். கடைசி போட்டியில் 125 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 25 இடங்கள் முன்னேறி 52-வது இடத்தில் உள்ளார. 

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

அழகோடு ஆரோக்கியம் காக்கும் செம்பரத்தம் பூ!

Sea of Milk – Dushsagar Falls!

அக்னி நட்சத்திர காலத்தில் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?

முழங்கால் மூட்டு வலிக்கு காரணமும் உடனடி எளிய தீர்வும்!

ஆசியாவிலேயே உயரமான ஸ்தூபி, 130 அடி உயர புத்தரின் சிலை உள்ள மைண்ட்ரோலிங் மடாலயம்!

SCROLL FOR NEXT