பணியாளர் தேர்வு ஆணையம் SSC MTS வேலைவாய்ப்பு 2023-24. பல்பணி ஊழியர்கள் Multitasking Staff (MTS) மற்றும் ஹவால்தார் Havaldar (Sergeant) பதவிகளுக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள் , கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.
வேலை இடம்: விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலை மற்றும் தேர்வு இடத்தை தேர்வு செய்யலாம்.
காலியிடங்கள்: 11,409
காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
1. பல்பணி ஊழியர்கள் Multitasking Staff (MTS) - 10,880
2. ஹவால்தார் Havaldar (Sergeant) - 529.
சம்பளம்:
பல்பணி ஊழியர்கள் Multitasking Staff (MTS) மற்றும் ஹவால்தார் Havaldar (Sergeant) : ரூ.18,000 - 22,000
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதிகள்:
இந்த பதவிக்கு 10வது தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (computer based exam).
உடல் திறன் சோதனை / உடல் தர சோதனை (physical efficiency test / physical standard test)
ஆகியவற்றின் செயல்திறன் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தயாராக இருக்க வேண்டும்.
பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை:
General Awareness (25 Questions, 75 Marks)
English Language and Comprehension (25 Questions, 75 Marks)
Numerical and Mathematical Ability (20 Questions, 60 Marks)
Reasoning Ability and Problem Solving (20 Questions, 60 Marks).
மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 90 ஆகவும் மொத்த மதிப்பெண்கள் 270 ஆகவும் இருக்கும். தவறான பதில்களுக்கு (wrong answers ) எதிர்மறை மதிப்பெண்கள் (negative mark) இருக்காது.
தேர்வின் கால அளவு: 90 நிமிடங்கள் இருக்கும்.
தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது: கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.
official website : https://ssc.nic.in/
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17-02-2023)
பணி அனுபவம்: இந்தப் பதவிக்கு மேலும் பணி அனுபவம் தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ஓபிசி பிரிவினருக்கு (General/OBC category) விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ( SC/ST/PWD category and women) விண்ணப்பக் கட்டணம்: ரூ.0
உயர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் SSC MTS இன் வழக்கமான பணியாளர்களும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.