-ஜி.எஸ்.எஸ்.
லப் டப்... லப் டப்...
• மனித இதயம் சராசரியாக தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகத் துடிக்கிறது.
• இதயம் தினமும் 2000 கேலன் ரத்தத்தைப் பம்ப் செய்து உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்புகிறது.
• உங்கள் விரல்களை நன்கு மடக்குங்கள். இப்போது உங்கள் முஷ்டியின் அளவு என்னவோ கிட்டத்தட்ட அதே அளவு கொண்டதுதான் இதயம்.
• இதய நோய் என்பது மிகத் தொன்மையான 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய மம்மி (பாடம் செய்யப்பட்ட உடல்) ஒன்றில்கூட காணப்படுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
• பாலூட்டிகளில் மிகப்பெரிய இதயத்தைக் கொண்டவை திமிங்கலங்கள்.
• ஒரு புள்ளிவிவரப்படி பெரும்பாலான மாரடைப்புகள் திங்கள் கிழமையில்தான் ஏற்படுகின்றன.
• ஒரு பெண்ணின் இதயம் ஆணின் இதயத்தை விட சற்று அதிக வேகத்துடன் துடிக்கிறது. ஆணின் இதயம் நிமிடத்திற்கு 70 முறை என்றும், பெண்ணின் இதயம் நிமிடத்திற்கு 78 முறை என்றும் துடிக்கிறது.
• உங்கள் உடலின் அத்தனை ரத்தக் குழாய்களையும் ஒன்றுக்கு அடுத்து ஒன்று என்று நீட்டினால் அது மொத்தம் 60000 மைல் தூரத்திற்குப் பரவும்.
• ஒரு கட்டத்தில் இதயத்திலுள்ள செல்கள் தங்களைப் பெருக்கிக்கொள்வதில்லை. இதயப் புற்றுநோய் என்பது மிகமிக அரிதாக இருக்க இதுதான் காரணம்.
• இதயத்தில் ஒலி என்பது இதய வால்வுகள் திறந்து மூடுவதால் உண்டாவதுதான்.
• பிறந்தவுடன் குழந்தைக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும்.
• வாய்விட்டுச் சிரிப்பது இதயத்துக்கு நல்லது.
• தும்மலின்போது கண்களை மூடலாம். ஆனால், இதயம் வழக்கம்போல இயங்கிக்கொண்டிருக்கும்.
• சீரான தினசரி உடற்பயிற்சிகள் இதய நலத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.
• கரு உருவான நான்கு வாரங்களிலேயே இதயம் துடிக்கத் தொடங்கி விடுகிறது.
• இசையைக் கேட்கும்போது அதற்கேற்ப இதயத் துடிப்பு ஓரளவு மாறுபடுகிறது.
• சிலர் நினைப்பதுபோல மார்பின் பெரும் பகுதி இடப்பகுதியில் இல்லை. நடுப்பகுதியில்தான் இருக்கிறது. கொஞ்சம் இடப்புறம் சாய்ந்திருக்கிறது.