Foods that protect teeth health 
ஆரோக்கியம்

பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!

கண்மணி தங்கராஜ்

ற்களின் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் நலனில் முக்கியப் பங்காற்றுகிறது. அதனால்தான், ‘பல் போனால் சொல் போச்சு’ என்று பெரியோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அந்த வகையில் ஆரோக்கியமான பற்களுக்கான உணவுப் பொருட்கள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பால்

பால்

ம்முடைய பற்களைப் பாதுகாப்பதில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. ஏனெனில், அதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. அவை பற்களின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. அதோடு, தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. தயிர், மோர், வெண்ணெய், நெய், பால், பாலாடைக்கட்டி போன்ற பால் சார்ந்த பொருட்களை தினமும் உட்கொள்வது பற்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமாகும்.

மீன்

மீன்

மீன்களில் அதிக அளவிலான புரதச் சத்துக்களும், ஊட்டச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இது நம்முடைய பற்களுக்கு உறுதி அளித்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதோடு, இது வாயில் உமிழ் நீர் சுரப்பதை அதிகரித்து பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

தண்ணீர்

தண்ணீர்

மது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்குமே தண்ணீர் மிகவும் முக்கியமானதாகும். நமது உடலானது 60 சதவீதம் நீரால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் அதிகமாக குடிக்க குடிக்க நம்முடைய பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக, தண்ணீர் அருந்துவது பல் சொத்தை ஏற்படாமல் தடுக்கிறது.

பீன்ஸ்

பீன்ஸ்

யற்கையாவே பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. சுவை மற்றும் சத்து மிகுந்த பீன்ஸை சூப்கள், கறிகள் மற்றும் சாலட்களில் எளிதாக சேர்க்கலாம். வெள்ளை பீன்ஸ் ஒரு கோப்பையில் 139 மி.கி. கால்சியம் அதிகமாக உள்ளதாகவும் நேவி பீன்ஸில் 123 மி.கி. மற்றும் எடமேம் (பேபி சோயாபீன்ஸ்) மற்றும் 98 மி.கி. உள்ளன.

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள்

ந்திய உணவு முறையின் அடிப்படையில் கீரை வகைகள் இடம்பெறாமல் அது முழுமையடையாது. முட்டைக்கோஸ் அல்லது பச்சைக் கீரைகள் போன்றவற்றில் கால்சியத்தின் சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கின்றன. இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு சத்துமிக்க நல்ல ஆதாரங்களாகும்.

கேரட், ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய்

கேரட் ஆப்பிள்

கேரட், ஆப்பிள் மற்றும் வெள்ளரி போன்ற பழம் மற்றும் காய்கறிகள் மிகுந்த ஆரோக்கியமிக்கவை. ஏனெனில், இதுபோன்ற பழம் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளன. அதோடு, இது உமிழ்நீர் உற்பத்தியைப் பெருக்குகின்றன.

திராட்சைகள்

திராட்சைகள்

திராட்சையில் இருக்கும் ஒருசில சத்துக்கள் ஈறுகளில் ஏற்படும் நோய்களைத் தடுக்க உதவுகின்றன. இதனால் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் எதிர்மறையாக பாதிக்கின்றன.

கிரீன் டீ மற்றும் தேங்காய்த் தண்ணீர்

கிரீன் டீ

பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். இருப்பினும், இந்த பானங்கள் நமது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவை பற்களை கறைபடுத்துவதோடு, பல் எனாமல் (Enamel) அரிப்புக்கும் காரணமாகின்றன. இதனால் கிரீன் டீ மற்றும் தேங்காய் தண்ணீர் போன்ற சத்தான பானங்களுக்கு மாற பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் அதே வேளையில், பல் எனாமலையும் பாதுகாக்கிறது.

பாதாம் மற்றும் முந்திரி

பாதாம் முந்திரி

பாதாம் மற்றும் முந்திரி விதைகளில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது. இது கால்சியத்துடன் சேர்ந்து பல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவை நம்முடைய ஈறுகளுக்கு நன்மை அளிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகளையும் கொண்டிருக்கின்றன.

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

SCROLL FOR NEXT