உலகின் மிக விலை உயர்ந்த உலோகங்கள்! இதெல்லாம் தங்கத்துக்கும் மேல பாஸ்...!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ஒரு வீட்டின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் முடிவு செய்கிறது தங்கம். ஆனால் உலகத்தில் தங்கத்தை விட அதிக விலை கொண்ட பொருட்கள் உள்ளன. அவை எவையென இப்பதிவில் காணலாம்.

Metal | Imge Credit: pinterest

கார்பன் (Carbon): கார்பன் என்பது மிக விலை உயர்ந்த தனிமங்களில் ஒன்றாகும். வைர வடிவிலான கார்பன் ஒரு கிராம் 54 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Carbon | Imge Credit: pinterest

ஃபிரான்சியம் (Francium): இதன் ஆயுட்காலம் 22 நிமிடங்கள் மட்டும்தான். பிறகு மற்றொரு உலோகமாக மாறிவிடும். இது பயன்பாட்டில் இல்லையென்றாலும் உலகின் மிக விலை உயர்ந்த கதிரியக்க தனிமமாக பார்க்கப்படுகிறது.

Francium | Imge Credit: pinterest

இரிடியம் (Iridium): பூமியிலிருந்து கிடைக்கும் தாதுக்களில் அரிய வகையான இந்த இருடியம் 6 கோடி ஆண்டுகள் பழமையானது. 1803 ஆம் ஆண்டு தான் இப்படி ஒரு தாதுப்பொருள் இருக்கிறது என்பதே கண்டுபிடிக்கப்பட்டது.

Iridium | Imge Credit: pinterest

புளூட்டோனியம் (Plutonium): புளூட்டோனியம் அணுகுண்டுகள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த தனிமங்களில் ஒன்று. இவை எளிதில் பற்றக் கூடியவை என்பதால், சேமித்து வைப்பது கடினம். இதன் விலை ஒரு கிராம் 3.3 லட்சம் ஆகும்.

Plutonium | Imge Credit: pinterest

ஸ்காண்டியம் (Scandium): இவை அலுமினிய உலோக கலவைகளில் ஒன்று. அதன் விளைவு முதல் முதலில் 1970 இல் கவனிக்கப்பட்டு இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை ஒரு கிராம் 22 ஆயிரம் ஆகும்.

Scandium | Imge Credit: pinterest

பிளாட்டினம் (Platinum): இவை அதிக வெப்பநிலையிலும் துருப்பிடிக்காது. இவை ஆண்டுக்கு சில நூறு டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை 48,000‌ ரூபாய்.

Platinum | Imge Credit: pinterest

காலிஃபோர்னியம் (Californium): ஒரு கிராம் காலிஃபோர்னியமின் விலை 2.22 கோடி ஆகும். இவை ஆண்டுக்கு அரை கிராம் மட்டுமே உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Californium | Imge Credit: pinterest

லுடேடியம் (Lutetium): லுடேடியம் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் உலோகமாகும்.

Lutetium | Imge Credit: pinterest

ரோடியம் (Rhodium): இவை வெள்ளை தங்க நகைகளில் இறுதி பூச்சுக்கு பயன்படுத்தப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி இருக்கும் அதே தாதுவில் தான் இவை கிடைக்கின்றன. ஆனால் மிகச்சிறிய அளவில் மட்டுமே கிடைக்கும்.

Rhodium | Imge Credit: pinterest

தங்கம் (Gold): இவை உலகம் முழுவதும் நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. எல்லோராலும் விரும்பப்படும் தங்கம் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் பத்தாவது இடத்தில் தான் உள்ளது.

Gold | Imge Credit: pinterest
Trisha | Imge Credit: pinterest