நாம் அணியும் ஆடைகள் நமது ஆளுமையின் பிரதிபலிப்பே!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

நாம் அணியும் உடைகள் நமது ஆளுமையையும், மனநிலையையும், நம்மைப் பற்றிய ஒரு மதிப்புரையையும் வழங்கக்கூடியவை.

Nayanthara | Imge Credit: pinterest

நாம் நம்மை எப்படி உணர்கிறோம் மற்றவர்கள் நம்மை எப்படி எண்ணுகிறார்கள் என்பதில் நமது ஆடைத் தேர்வுகள் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணும். 

Anushka sharma | Imge Credit: pinterest

நமது உடைகள் நம் எண்ணங்களையும், நடத்தையையும் பிரதிபலிக்கும் ஆற்றல்கொண்டவை என்று உளவியல் நிரூபித்துள்ளது. 

Samantha | Imge Credit: pinterest

நம்முடைய ஆடைத் தேர்வுகள் நமது கலாச்சார பின்னணியையும், நம் தனிப்பட்ட ஆர்வங்களையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும்.

Sai Pallavi | Imge Credit: pinterest

மஞ்சள் அல்லது ஆரஞ்சு: மஞ்சள் அல்லது ஆரஞ்சு போன்ற பிரகாசமான வண்ணங்களில் ஆடைகள் அணிவது நம் உற்சாகத்தை மேம்படுத்துவதுடன், மகிழ்ச்சியையும், நம்பிக்கை உணர்வுகளையும் ஊக்குவிக்கும்.

Keerthy suresh | Imge Credit: pinterest

நீலம் மற்றும் பச்சை: நீலம் அல்லது பச்சை போன்ற குளிர்ச்சியான வண்ணங்கள் மன அமைதியை ஏற்படுத்தும்.

Anushka | Imge Credit: pinterest

ஆரஞ்சு நிறம்: ஆரஞ்சு நிறமான காந்த அலைக் கதிர்கள் நம் உடலின் எலும்புகளுடன் தொடர்புடையவை. ஆரஞ்சு வண்ண ஆடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் அணிவது நல்லது.

Shreya | Imge Credit: pinterest

வெண்மை நிறம்: இவை நம் உடலின் ரத்தத்துடன் தொடர்புடையவை. திங்கட்கிழமைகளில் வெண்மை, சில்வர் நிற ஆடைகளை அணிவது சிறப்பு.

Anupama | Imge Credit: pinterest

இளம் சிவப்பு நிறம்: இளம் சிவப்பு நிறம் நம் உடலின் எலும்பு மஜ்ஜையோடு தொடர்புடையது. செவ்வாய்க்கிழமைகளில் இளம் சிவப்பு நிற ஆடைகளை அணிவது நல்லது.

Amrita Iyer | Imge Credit: pinterest

பச்சை நிறம்: பச்சை நிறமானது நம் உடலின் சருமத்தோடு தொடர்புடையது. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகள் அணிவது சிறப்பாக கருதப்படுகிறது. பச்சை நிற ஆடைகளை அணிவதால் நம் உடல் சூடு குறையும்.

Kajol | Imge Credit: pinterest

பொன்னிறம் அல்லது மஞ்சள்: பொன்னிறமானது நம் உடலின் மூளையுடன் தொடர்புடையது. வியாழக்கிழமைகளில் மஞ்சள் அல்லது பொன்னிறமான ஆடைகளை அணியலாம்.

Shruti Haasan | Imge Credit: pinterest

வெண்மை அல்லது கடல் நீலம்: வெள்ளிக்கிழமைகளில் வெண்மை அல்லது கடல் நீலக் கலரில் ஆடைகள் அணிவது சிறப்பு. இந்த வண்ணங்கள் உடலின் விந்துநாதத்துடன் தொடர்புடையவை.

Hansika Motwani | Imge Credit: pinterest

சாம்பல் அல்லது கருப்பு நிறம்: சாம்பல் அல்லது கருப்பு நிறமானது நம் உடலின் நரம்புகளோடு தொடர்புடையவை. சனிக்கிழமைகளில் சாம்பல் நிற ஆடைகளை அணிவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

Rashmika Mandanna | Imge Credit: pinterest
Bhavani saagar Dam