உருக்குலைந்து போகும் உதயம் தியேட்டர்!

கண்மணி தங்கராஜ்

சென்னையின் அடையாளமாகவும் சென்னை திரை அரங்கு வரலாற்றில் முக்கிய அம்சமாகவும் விளங்கும் உதயம் தியேட்டர் 90 களில் சினிமா ரசிகர்களின் விசில் சத்தம், கைதட்டல் என கொண்டாட்டங்கள் நிறைந்த இடமாக இருந்து வந்தது.

Udhayam Theatre

சுமார் 40,000 அடி சதுர அடியில், 1.31 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிக முக்கிய பகுதிகளுள் ஒன்றான அசோக் நகரில் அமைந்துள்ள உதயம் திரையரங்கம் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

Udhayam Theatre

ஆரம்பத்தில் ஆறு சகோதரர்களால் ஒன்று சேர்ந்து கட்டப்பட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த திரையரங்கம். பின்பு அந்நிருவனர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 53 பங்குதாரர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.

Udhayam Theatre

அதன் பின் 2009ஆம் ஆண்டு ஏலத்தின் மூலமாக தியேட்டர் விற்பனைக்குத் தள்ளப்பட்டது. ஏலத்தின் போது ஆறு சகோதரர்களுள் ஒருவரான பரமசிவம் பிள்ளை என்பவரால் ரூபாய் 80 கோடி ரூபாய்க்கு உதயம் தியேட்டர் கைமாறியது.

Udhayam Theatre

இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் வெற்றிகரமாக இயங்கி வந்தன. ஒவ்வொரு திரையரங்கிலுமே குளிரூட்டி வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதோடு டி.டி.எஸ் ஒலிப்பெருக்கியானது பொருத்தப்பட்டுள்ளது.

Udhayam Theatre

ஆனால் நாட்கள் செல்ல செல்ல திரையரங்கிற்கு மக்களின் வருகையானது குறைந்துகொண்டே வந்தது.

Udhayam Theatre

சென்னையில் பல மல்டிப்லக்ஸ் தியேட்டர்கள் வந்தபோதிலும், உதயம் தியேட்டர் எந்தவொரு புதுவித மாற்றங்களும் இன்றி பழைய படியே இயங்கிக்கொண்டிருந்தது. இதுவேகூட இதன் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

Udhayam Theatre

உதயம் திரையரங்கு தற்போது, பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பத்து நாட்களுக்கு முன்பு கையெழுத்தானது.

Casagrand

தற்போது உதயம் திரையரங்கு இருக்கும் இடத்தில் பலமாடி அடுக்கு குடியிருப்பு மற்றும் அலுவலகம் சார்ந்த வளாகம் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Casagrand

இந்த திரையரங்கம் வெறும் ஒரு பொழுதுபோக்கு வெளியாக மட்டுமில்லாமல், தொழிற்முறை சார்ந்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்தது.

Udhayam Theatre

பலரது மனதிற்கும் மிகவும் நெருக்கமாக இருந்த உதயம் திரையரங்கம் நினைவுகளாக மாற இருக்கிறது. சுமார் 40 ஆண்டு கால சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி இன்னும் சில நாட்களில்.

Udhayam Theatre

ஆம்! உதயம் திரையரங்கம் இன்னும் சில நாட்களிலேயே நிரந்தரமாக மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவாகவே திரையரங்கு இடிக்கப்படும்.

Udhayam Theatre
Sundakkai | Img Credit: Lite Bite
இத்துணூண்டு சுண்டைக்காயில் இவ்வளவு நன்மைகளா?