ராகவ்குமார்
நடிப்பு, பேச்சாற்றல், இயக்கம், நிர்வாகம் என பன்முகத்திறன் கொண்ட சுஹாசினியின் பிறந்தநாள் இன்று - ஆகஸ்ட் 15
பிறப்பு - 1961,
குழந்தை பருவம் - பரமக்குடியில். அப்பா சாருஹாசன், சித்தப்பா கமலஹாசனுடன் கழிய, மேற்படிப்பை மதுரையில் முடித்தார்.
திரை அறிமுகம் - 1980 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படம்.
பல விருதுகளும், பேரும் புகழும் பெற்றுத் தந்த படம் - 1981 ஆம் ஆண்டு வெளியான பாலைவனச் சோலை.
தேசிய விருது பெற்றுத் தந்த படம் - சிந்துபைரவி.
கமல் நடித்த நாயகன், ரஜினி நடித்த மனிதன் படங்களோடு போட்டிப்போட்டுக் கொண்டு, வசூலில் சாதனை படைத்து, 1987 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படம்: மனதில் உறுதி வேண்டும்.
இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டது - 1988
வசனம் எழுதியது: மணிரத்தினம் இயக்கிய ராவணன்
இயக்கியது: 1995 ஆம் ஆண்டு வெளியான இந்திரா
ஆண்டுதோறும் ஒருங்கிணைத்து வழங்கும் நிகழ்ச்சி: சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா.
1980 களில் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்று இருந்த சினிமா நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து நடத்துவது: 80' s ரீயூனியன்.
காலங்கள் கடந்தும் மனதில் நிற்கும் சுஹாசினியின் கதாபாத்திரம்: 1982- ஆவது ஆண்டில் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தில் நடித்த 'அருக்காணி'
கணவருடன் இணைந்து நடத்தும் நிறுவனம்: 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ் டாக்கீஸ் (திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம்)
சுஹாசினி வாங்கிய விருதுகள்: 4 பிலிம்பேர் விருதுகள், 2 கேரள மாநில விருதுகள், 2 தமிழ்நாடு மாநில விருதுகள் மற்றும் 2 நந்தி விருதுகள்.
சுஹாசினி - பெயர் பொருத்தம் படு சூப்பர்! சுஹாசினி மணிரத்தினத்தின் இயல்பான பேச்சு, அழகான ஆடை அலங்காரம், இளமையான தோற்றம், அனைவரையும் கவரும் சிரிப்பு .... இன்று போல் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துவோம். Happy Birthday Suhasini Maniratnam!