ராகவ்குமார்
1958ஆம் ஆண்டு ஆலப்புழாவில் பிறந்தவர் சுரேஷ் கோபி. பள்ளி, கல்லூரி படிப்பை கேரளாவின் கொல்லத்தில் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் தென் காசிக்கு மிக அருகில் கொல்லம் இருப்பதால் நம்ம கோபிக்கு தமிழும் அத்துப்படி.
சுரேஷ் கோபி நாதன் நாயர் என்பதன் சுருக்கம்தான் சுரேஷ் கோபி. அப்பா பெயர் கோபி நாதன். அம்மா பெயர் ஞான லட்சுமி.
1965ஆம் ஆண்டு 'ஓடையில் நின்னு' என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
‘இருபதாம் நோட்டாண்டு’ என்ற மலையாள படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
1988ல் மம்முட்டிக்கு திருப்புமுனையாக அமைந்த ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
1993ல் மோகன் லாலுக்கு முக்கியப் படமாக அமைந்த ‘மணி சித்ரதாழ்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
1993ல் வெளியான ‘ஏகலவ்யன்’ திரைப்படம் சுரேஷ் கோபிக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்று தந்தது.
1998ல் 'களியாட்டம்’ என்ற படத்தில் நடித்ததற்காக சுரேஷ் கோபிக்கு தேசிய விருது கிடைத்தது.
தமிழில் அஜீத்துடன் இணைந்து நடித்த ‘தீனா’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மனைவி ராதிகா மற்றும் 4 குழந்தைகள் என்று நல்லதொரு குடும்பம் இவருடையது.
2016ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2016 ஏப்ரலில் மாநிலங்களவை உறுப்பினரானர். 2016ல் தகவல் தொடர்பு மற்றும் தகவல் நிலைக்குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
2019-2022 வரை பழங்குடியினர் அமைச்சகம் மற்றும் தென்னை வளர்ச்சி குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். 2021 ல் பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருச்சூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றார் சுரேஷ் கோபி. கேரளாவிலிருந்து பிஜேபி சார்பாக வெற்றி பெற்ற முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமை இவரைச் சாரும்.
முதலில் அமைச்சர் பதவி வேண்டாம் என்றவர் தற்போது பெட்ரோலியம் - இயற்கை வாயு மற்றும் சுற்றுலா துறை அமைச்சராக உள்ளார்.
நாடாளுமன்றத்தில் மலையாளத்தில் பதவி ஏற்றுக்கொண்ட சமயம், 'கிருஷ்ணா’, ‘குருவாயூரப்பா’ என்று சுரேஷ் கோபி சொன்னது பலரையும் வியப்பில் ஆழத்தியது.
Suresh Gopiyin 66வது பிறந்த நாள். HBD Suresh Gopi Sir!