MGR Quotes: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 15 பொன்மொழிகள்!

பாரதி

முன்னாள் தமிழக முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும், இன்றும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறார். அந்தவகையில் அவரின் சில பொன்மொழிகள் பற்றிப் பார்ப்போம்.

M.G. Ramachandran | Imge Credit: pinterest

உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

சமுதாயத்தில் மக்கள் வாழ்வதற்காக ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்கு உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

படித்தவன் புத்திசாலியாகிறான் என்ற சொன்னால் மட்டும் போதாது. தன்னை வாழவைத்துக் கொள்கிற தகுதியுள்ளவனாக வெளியே வருகிறான்; தொழில் பயின்றவனாக வருகிறான் என்கிற உரிமை – தகுதி இருக்க வேண்டும்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

இளைஞர்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளாக இருக்கக்கூடாது.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

மத, இன, சாதி, மொழி, முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழிவகுக்கும்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத்தான் சொந்தம்; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும் போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

நல்ல பணிகளுக்கு நாம் செலவு செய்யத் தாராளமாக முன்வர வேண்டும்.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest

நமது பணிகளில் தாமதம் கூடாது. நமது பயணத்தில் தயக்கம் இருத்தலாகாது. நமது உழைப்பில் குறைபாடு இருத்தல் ஆகாது.

M.G. Ramachandran | Imge Credit: Pinterest
Christmas
கிறிஸ்துமஸ் பற்றிய அரிய தகவல்கள்!