எஸ்.மாரிமுத்து
கிறிஸ்துமஸ்: கிறிஸ்துமஸ் என பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
கிறிஸ்துமஸ் தாத்தா: முதன் முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ் .
கிறிஸ்துமஸ் குடில்: கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான அலங்காரங்களுடன் உலகம் எங்கும் அமைக்கப்படும். இதை முதன் முதலாக புனித பிரான்சிஸ் என்பவர் 1722ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.
பூக்களுடன் கிறிஸ்துமஸ் மரம்: ஸ்வீடன் நாட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை முழுக்க முழுக்க இய்றகை பூக்கள் மற்றும் இலைகளையே பயன்படுத்தி அலங்கரிப்பார்கள்.
கிறிஸ்துமஸ் மரம்: கிறிஸ்துமஸ் மரம் 1882-ம் ஆண்டு முதன் முதலாக மின் விளக்குகளால் அலங்கரிங்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டு முதல் வீடுகளை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன.
மலர் அலங்காரம்: மரங்களின் இலைகள், மற்றும் மலர்களை கட்டி அலங்கரிக்கும் வழக்கம் 1841 ம் ஆண்டு இங்கிலாந்தில் ஆரம்பித்தது. அல்பெர்டினால் என்ற அரசன் முதன் முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார்.
கிறிஸ்துமஸ் கேரல் கீதங்கள்: 4 ஆம் நூற்றாண்டு முதல் ஆலயங்களிலும், 13-ம் நூற்றாண்டு முதல் தெருக்களிலும் பாடப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு: பரிசு கொடுக்கும் வழக்கம் 10-ம் நூற்றாண்டில் தோன்றினாலும், 19-ம் நூற்றாண்டில் தான் வடிவம் பெற்றார்.
வாழ்த்து அட்டை: கிறிஸ்துமஸ் அட்டை 1873 -ல் லித்தோ கிராஃப் நிறுவனமான பிராங் மற்றும் மேயர் பிரிட்டனில் பிரபலமான சந்தைக்கு வாழ்த்து அட்டைகளை உருவாக்கி 1874-ல் அமெரிக்காவில் கார்டுகளை வழங்கும் முதல் பிரிண்டர் ஆனது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கி அட்டையில் படத்தை அச்சிட்டு உறவினர்களுக்கு முதன் முதலாக வாழ்த்து அட்டை அனுப்பினார்.
பசிலிக்கா ஆலயம்: பசிலிக்கா என்பது கிரேக்க சொல். இதற்கு பெரிய கிறிஸ்துவ ஆலயம் என்று பொருள். இந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உள்ளன.
சிலுவையின் மரத்துண்டு இயேசு நாதர் தனது தோளில் சுமந்து சென்று ஆணியில் அறையப்பட்டு உயிர் தியாகம் செய்த புனித மரத்துண்டு, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆலயத்தில் இன்றும் ஆசி வழங்கி வருகிறது. இதற்கு காரணமாக இருந்தவர் பங்கு தந்தை ஜான் சேத லனோவா அடிகளார்.
தபால் தலை: முதன் முதலில் கிறிஸ்துமஸ் தபால் தலையை வெளியிட்ட நாடு கிரேட் பிரிட்டன். இது ஆங்கில ஆசிரியர் சர் ரோலண்ட் ஹில் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் கேக்: 16ம் நூற்றாண்டில் வசதி படைத்தவர்கள் கோதுமை மாவில் உலர்ந்த பழங்களை சேர்த்து கேக்காக உருவாக்கினர். இதுவே நாளடைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வந்தது.