நவரச நாயகன் சிவாஜி: கலைத்தாயின் முதல் மகனின் காவிய வரலாறு!

புவனா நாகராஜன்

சிவாஜி கணேசன்:

1/11. 1928ல் பராசக்தியாய் மலர்ந்து 2001ல் படையப்பாவாய் உதிா்ந்த கலைத்தாயின் தவப்புதல்வனே! பராசக்தி தொடங்கி படையப்பா வரை தமிழில் மட்டும் 275 படங்களில் நடித்த நவரசமே!

சிவாஜி கணேசன் | AI image

2/11. செக்கிழுத்த செம்மல் வ. உ. சி பெருமகனாரை எங்கள் கண்முன்னே நிறுத்திய கலைச்செல்வமே!

சிவாஜி கணேசன் | AI image

3/11. வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் இப்படித்தான் இருப்பாா் என நிலை நாட்டிய நிதர்சனமே!

சிவாஜி கணேசன் | AI image

4/11. சிவபெருமான், நாரதர் அப்பர் இவர்களை அடையாளம் காட்டிய திருவருட் செல்வனே!

சிவாஜி கணேசன் | AI image

5/11. கா்ணன் இப்படித்தான் இருப்பான் என காட்சிப்படுத்திய  கலையின்  நாயகமே!

சிவாஜி கணேசன் | AI image

6/11. வீரபாகுவை ரசிகர்களின் விழித்திரையில் நிலை நிறுத்திய வீரமகனே!

சிவாஜி கணேசன் | AI image

7/11. முதல் மரியாதையில் நடையால் நடிப்பால் தாங்கிப் பிடித்த தமிழ்த்தாயின் தலைநகரமே!

சிவாஜி கணேசன் | AI image

8/11. உடல் அசைவால், சொல்லால் வசன உச்சரிப்பால் ராஜராஜ சோழனை கண்முன்னே நிறுத்திய நடிப்பின் நாயகனே!

சிவாஜி கணேசன் | AI image

 9/11. சண்முக சுந்தரமாகவே மாறி  நாதஸ்வர வித்வனாய் வியப்பில் ஆழ்த்திய ஆயிரத்தில் ஒருவனே! 

சிவாஜி கணேசன் | AI image

10/11. மிடுக்காய் உடையணிந்து அதன்வகையில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த தங்கப்பதக்கமே !

சிவாஜி கணேசன் | AI image

11/11. கலைத்தாயின் தவப்புதல்வனே கருணையின் வடிவே நினது இடத்தை பிடிக்க இனி ஒரு நடிகன் பிறந்ததும் இல்லை பிறக்கப் போவதும் இல்லை. நீயே ஒரு கலைப்பொக்கிஷம்! நீயே கலைக்குரிசில், நீயே கலைத்தாயின் முதல்மகன், நீ ஒரு வரலாறு, நின் நினைவுநாளில் உம்மை வணங்கி மகிழ்கிறோம்!

சிவாஜி கணேசன் | AI image
sreeleela
முன்னணி நடிகை ஶ்ரீலீலா பெரிய படங்களைத் தவிர்ப்பதற்குப் பின்னால் இருக்கும் உண்மை இதுதான்...