முன்னணி நடிகை ஶ்ரீலீலா பெரிய படங்களைத் தவிர்ப்பதற்குப் பின்னால் இருக்கும் உண்மை இதுதான்...

கல்கி டெஸ்க்

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஶ்ரீ லீலா(sreeleela), 'பெல்லி சண்டாடி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

sreeleela

தொடர்ச்சியாக நடித்து வந்தவர், 'பகவந்த் கேசரி' திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்து பெயர் பெற்றார்.

sreeleela

மகேஷ்பாபுவுடன் 'குண்டூர் காரம்’ திரைப்படத்தில் இவர் ஆடிய நடனத்திற்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது.

sreeleela

தெலுங்கின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வந்த நிலையில், அவர் நிராகரித்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

sreeleela

அக்கினேனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டான'லெனின்' திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஶ்ரீலீலா தான்.

sreeleela

அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்ததன் காரணமாக, அந்த வாய்ப்பு பாக்கியஸ்ரீ போர்ஸுக்கு சென்றது. திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

sreeleela

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'கிங்டம்’ மற்றும் 'அனகனக ஒக்க ராஜு' உள்ளிட்ட பல திரைப்படங்களின் வாய்ப்புகளை அவர் கைநழுவ விட்டுள்ளார்.

sreeleela

தமிழ் சினிமாவில் அஜித் உடன் நடிக்கும் ஒரு வாய்ப்பையும் ஸ்ரீலீலா(sreeleela) தவற விட்டார்.

sreeleela

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இத்திரைப்படத்தில் ஶ்ரீலீலாவுக்கு பதில் தற்போது கயாடு லோஹர் நடித்து வருகிறார்.

sreeleela

ஸ்ரீலீலா வாய்ப்புகளை மறுப்பதற்கு பின் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

sreeleela

அவர் நடிகை மட்டுமல்ல, மருத்துவக் கல்லூரியின் மாணவியும் கூட. நடிப்போடு சேர்ந்து படிப்பிலும் அவர் கவனம் செலுத்துகிறார்.

sreeleela

தற்போது தனது மருத்துவக் கல்லூரியின் படிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதால், சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியுள்ளார்.

sreeleela

திரையிலிருந்து விலகாமல் ஓய்வு நேரங்களில் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

sreeleela
ஐஸ் மசாஜ் | AI image
சருமத்தின் இளமையைக் காக்கும் 'ஐஸ் க்யூப்' வைத்தியம்: நீங்கள் அறியாத உண்மைகள்!