பாரதி
ரஜினிகாந்த் தனது படங்களில் பயன்படுத்தி இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்தவையாக இருக்கும் சில வசனங்களைப் பார்ப்போம்.
பேட்ட: சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேல்தான் பாக்க போற…
படையப்பா: என் வழி தனி வழி...
பாபா: நா யோசிக்காம பேச மாட்டேன்… பேசின பிறகு யோசிக்க மாட்டேன்.
முத்து: நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது… ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்.
மூன்று முகம்: தீ பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் தீ பிடிக்கும்… ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசுனாலும் தீ பிடிக்கும்…
தர்மதுறை: நல்லவனா இருக்கலாம். ஆனால் ரொம்ப நல்லவனா இருக்கக்கூடாது.
அண்ணாமலை: கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது… கஷ்டப்படாம கெடச்சது எதுவும் நிலைக்காது…
பாட்ஷா: நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய குடுப்பான் ஆன கைவிட்ருவான்…
பாட்ஷா: கதம் கதம்… முடிஞ்சது முடிஞ்சு போச்சு…
ஜானி: ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ… இந்த உலகத்துல எத எடுத்தாலும் ஒன்னைவிட ஒன்னு better ஆதா இருக்கும்… அதுக்கு ஒரு முடிவே இல்ல… அதுக்காக நம்ம மனச மாத்திக்கிட்டே போகக்கூடாது…
தர்பார்: சார்… நம்புறவங்களுக்கு வயசு வெறும் நம்பர்தான்… முடியாதுன்னு நீங்க உங்கள வச்சு சொல்றீங்க…. முடியும்னு நான் என்ன வச்சு சொல்றேன்.
முத்து: கிடைக்கிறது கிடைக்காம இருக்காது… கிடைக்காம இருக்கிறது கிடைக்காது…
அண்ணாமலை: நா சொன்னதையும் செய்வேன்… சொல்லாததையும் செய்வேன்…
கோச்சடையான்: வாய்ப்புகள் அமையாது. நாமதான் அமைத்துக்கொள்ள வேண்டும்.
16 வயதினிலே: இது எப்டி இருக்கு??
பாட்ஷ: நா ஒரு தடவ சொன்ன... நூறு தடவ சொன்ன மாதிரி