ஆர்.ஐஸ்வர்யா
Actors education
1. முதல்வர் விஜய்: லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்றார்; சமூகச் சேவைகளுக்காக எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.
2. சூர்யா: லயோலா கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்று, சினிமாவுக்கு முன் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.
3. த்ரிஷா: எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ. படித்தவர்; 1999-ல் 'மிஸ் சென்னை' பட்டம் வென்றார்.
4. சிவகார்த்திகேயன்: ஐ.இ.டி. கல்லூரியில் ஐ.டி. (IT) பிரிவில் பி.டெக். மற்றும் மேலாண்மைப் பட்டமும் (MBA) பயின்றவர்.
5. சமந்தா: ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்; பகுதிநேர மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தார்.
6. விஜய் சேதுபதி: தான்ராஜ் பைத் ஜெயின் கல்லூரியில் பி.காம். படித்தவர்; துபாயில் கணக்காளராகவும் பணியாற்றியுள்ளார்.
7. ராஷ்மிகா மந்தனா: எம்.எஸ். ராமையா கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியம் பயின்றவர்.
8. சாய் பல்லவி: ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ். படித்து, இந்தியாவில் FMGE தேர்விலும் தேர்ச்சி பெற்ற மருத்துவர்.
9. மம்மூட்டி: எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று, இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
10. துல்கர் சல்மான்: அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.