தளபதி திருவிழா: 'ஜன நாயகன்' பற்றி பிரபலங்கள்....

கல்கி டெஸ்க்

ஜன நாயகன் படத்தை பற்றியும், நடிகர் விஜய் பற்றியும் பிரபலங்களின் நெகிழ்ச்சியான மற்றும் காரசாரமான கருத்துகள் உங்கள் பார்வைக்கு...

Vijay - Jana Nayagan Audio Launch

நாசர்: ‘‘தமிழ் சினிமாவுக்கு விஜய் தேவை. நடிப்பு பற்றிய முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும். விமர்சனங்கள் வரும். விமர்சனத்தை கடந்துபோகும் பக்குவம் விஜய்யிடம் உள்ளது!’’

Nasar

நடிகர் நரேன்: ‘‘விஜய்யுடைய கனவுகள் நிறைவேற வாழ்த்துகள். மேலும் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை, ஜனநாயகன் படத்தின் மூலம் நிறைவேறியது!’’

Narain and vijay

நடிகர் கருணாஸ்: ‘‘விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் சினிமா ஒன்றும் அழிந்து விடாது. அது அப்படியேதான் இருக்கும். யாருக்காகவும் காத்திருக்காது!"

Karunas

சரத்குமார்: ‘‘விஜய் வளர்ந்த நடிகர், அவருக்கு நான் அறிவுரை சொல்ல முடியாது. ஒரு பெண் நிர்வாகி கேட்கும்போது வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்பவர்தான் கதாநாயகனாக இருக்கமுடியும். தலைவனாக இருக்கமுடியும்!’’

Sarathkumar

விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார்: ‘‘ஏழைகளுக்காக பேசும் விஜய், ஜனநாயகன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்கக்கூடாது. 'அரசு நிர்ணயித்த விலையில் தான் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும்; படம் பார்க்க வேண்டும்' என்று அறிக்கை விட விஜய்க்கு தைரியம் இருக்கிறதா?"

P.T. Selvakumar

இயக்குநர் ஹெச்.வினோத்: “ஜனநாயகன் தளபதி படம். ஆடி பாடி கொண்டாடவும் விஷயம் இருக்கு, அமைதியாக உட்கார்ந்து யோசிக்கவும் விஷயம் இருக்கும். தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான்!”

H. Vinoth

லோகேஷ் கனகராஜ்: “ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது. உங்களுடன் பணியாற்றிய ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள்!"

Lokesh Kanagaraj and Vijay

மாளவிகா மோகனன்: “நான் இப்போதும், எப்போதும் தளபதியின் ரசிகைதான்! உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவராக, அவருக்கும் இந்த திரைப்படத்தின் குழுவுக்கும் என் வாழ்த்துக்கள்!"

Malavika Mohanan and vijay

அருண் விஜய்: “விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு காத்திருக்கிறேன். சக நடிகன் என்ற முறையில் விஜய்யின் கடைசி படம் என்பது எனக்கும் கஷ்டம் தான். அவருக்கு என்றைக்கும் நம்முடைய ஆதரவு இருக்கும்!"

Arun Vijay

நெல்சன் திலீப்குமார்: “ஒரு ஆடியோ லான்ச் இப்படி இருக்குனு எதிர்பார்க்கவில்லை. இந்த கூட்டத்தை பார்க்கும் போது Argentina world cup match பாக்குற மாதிரி இருக்கு!"

Nelson Dilipkumar | Img Credit: Twitter (X)

அட்லீ: “எனக்கு கிடைத்த சக்சஸ் எல்லாத்துக்கும் காரணம் விஜய் அண்ணா தான். அவர் மட்டும் என் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கவே மாட்டேன்!”

Atlee | Img Credit: Twitter (X)

அனுராதா ஸ்ரீராம்: “இது தளபதியோட திருவிழா, மிகவும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி," என்று கூறிய அனுராதா ஸ்ரீராம் இந்த நிகழ்ச்சியில் ‘ஒரு நாள் ஒரு கனவு’ உள்ளிட்ட விஜய் ஹிட் பாடல்களை பாடி காட்டினார்!

Anuradha Sriram | Img Credit: Tamil Mithran

இசையமைப்பாளர் அனிருத்: "என்னுடைய 21 ஆவது வயதில் என்னை நம்பி கத்தி படத்தில் வாய்ப்பை தந்ததற்கு விஜய்க்கு நன்றி. இந்த பொங்கலுக்கு ஒரு மிகப்பெரிய 'சம்பவம்' காத்திருக்கிறது!"

Anirudh Ravichander

மமிதா பைஜூ: "விஜய் அருகில் நிற்பது எனக்கு ஒரு கனவு போல இருக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் விஜய்யுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்".

Mamitha Baiju

தெலுங்கு நடிகர் சுனில்: "என்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு ரசிகர் பட்டாளத்தை பார்த்ததேயில்லை!"

Telugu actor Sunil

ஹிந்தி நடிகர் பாபி தியோல்: "விஜய் ஒரு மிக சிறந்த மனிதர். அவருடன் பணியாற்றியது பெருமையளிக்கிறது."

Bobby Deol

பிரியாமணி: "விஜய்யுடைய கடைசி படமான ஜனநாயகனில் அவருடன் நடித்தது எனக்குக் கிடைத்த பெருமை. அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு."

Priyamani

பிரேமலதா விஜயகாந்த்: "விஜய்யின் ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அன்று விஜயகாந்த் எப்படி தம்பியாக விஜய்யை கைத்தூக்கி விட்டாரோ, இன்றும் விஜய் அதே அன்புடன் எங்களை நடத்துகிறார்!"

Premalatha Vijayakanth

நடிகர் பார்த்திபன்: "விஜய் அரசியலுக்கு வருவதை குறிக்கும் டிரைலர் போல இந்த ஜனநாயகன் படம் இருக்கிறது. என்னுடைய உதவியாளராக பணியாற்றிய H.வினோத் இந்த படத்தை இயக்குகிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது."

Actor Parthiban

பூஜா ஹெக்டே: "விஜய் ஒரு சிறந்த தொழில்முறை நடிகர். அவர் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்."

Pooja Hegde

பிரகாஷ் ராஜ்: "அன்று கில்லி படத்தின் போது பார்த்த அதே அமைதியும், அதே புன்னகையும் இன்றும் அவரிடம் மாறாமல் அப்படியே இருக்கிறது."

Prakash Raj

ஆண்டிரியா ஜெரமையா: "விஜய்யுடன் பணியாற்றியது இனிமையான அனுபவம். அவர் தொழில்முறை நேர்த்தி கொண்டவர்."

Andrea Jeremiah
New-Year-2026
New Year 2026: நாங்க இப்படியும் புத்தாண்டு வாழ்த்து சொல்லுவோம்..!