ஆர்.பிரசன்னா
யார் யார் எப்படி எப்படி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிப்பார்கள்... ஒரு சின்ன நகைச்சுவையான கற்பனை... இது யார் மனதையும் புண் படுத்த அல்ல... புண் பட்ட மனதை பண் படுத்த!
டெலிஃபோன் பூத் உரிமையாளர் - 'பூத்'தாண்டு வாழ்த்துகள்!
குத்துச்சண்டை வீரர் - 'குத்'தாண்டு வாழ்த்துகள்!
கீரை வியாபாரி - 'சத்'தாண்டு வாழ்த்துகள்!
தெருக்கூத்து கலைஞர் - 'கூத்'தாண்டு வாழ்த்துகள்!
பலூன் வியாபாரி - 'காத்'தாண்டு வாழ்த்துகள்!
வெற்றியாளர்கள் - 'கெத்'தாண்டு வாழ்த்துகள்!
தோல்வியாளர்கள் - 'வெத்'தாண்டு வாழ்த்துகள்!
தூய்மை பணியாளர் - 'சுத்த'ஆண்டு வாழ்த்துகள்!
பல் டாக்டர் - 'டூத்'தாண்டு வாழ்த்துக்கள்!
காலண்டர்:
தினசரி காலண்டரோ, மாத காலண்டரோ இல்லாமல் புத்தாண்டு இல்லை! சில நாடுகளின் காலண்டர் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாமே!
சூரியனை அடிப்படையாக வைத்து முதன் முதலாக ரோமானியர்கள் காலண்டர் உருவாக்கினர்.
தற்போது புழக்கத்தில் உள்ளது கிரிகோரியன் காலண்டர் 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இங்கிலாந்து 1752 முதல் இக் காலண்டரைப் பின்பற்ற ஆரம்பித்தது.
ஜூலியஸ் சீசர்தான் கி.மு 46ல் ஜனவரியை முதல் மாதமாகக் கொண்ட காலண்டரை அறிமுகப் படுத்தினார்.
நைல் நதிதான் தொடக்க கால காலண்டர் உருவாகக் காரணமாக அமைந்ததாம்.